கல்யாண் வைத்தியநாதன் குட்டூர் சுந்தரம் | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் திசம்பர் 20, 1958 – செப்டம்பர் 30, 1967 | |
முன்னையவர் | சுகுமார் சென் |
பின்னவர் | எஸ். பி. சென் வர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குட்டூர், சென்னை மாகாணம் | 11 மே 1904
இறப்பு | 23 செப்டம்பர் 1992 புதுதில்லி, இந்தியா | (அகவை 88)
தேசியம் | இந்தியன் |
துணைவர் | இந்திரா சுந்தரம் |
பிள்ளைகள் | விவன் சுந்தரம் |
விருதுகள் | பத்ம விபூசண் (1968) |
கல்யாண் சுந்தரம் (Kalyan Sundaram) மற்றும் கே. வி. கே. சுந்தரம் எனவும் அழைக்கப்பட்ட கல்யாண் வைத்தியநாதன் குட்டூர் சுந்தரம், (மே 11,1904 - செப்டம்பர் 23, 1992), இந்தியாவின் முதல் பொதுச் செயலாளராகவும் (1948-58), இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையராகவும் (20 டிசம்பர் 1958 - 30 செப்டம்பர் 1967) பணிபுரிந்தவர் ஆவார். 1968-71 காலப்பகுதியில் இந்தியாவின் ஐந்தாவது சட்ட ஆனையத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.[1][2] இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மொழியியல் கோட்பாடுகளுடன் வரையப்பட்ட மாநிலங்களாக இந்தியாவை உருவாக்கும் வழிகாட்டியாக இருந்த வெள்ளை அறிக்கையை தயாரித்த முக்கிய அதிகாரி ஆவார். இதற்காக, அவர் தனிப்பட்ட நன்றி மற்றும் அதிக பாராட்டுக்களை லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனிடமிருந்து பெற்றார். அவர் ஒரு சமஸ்கிருத அறிஞர் ஆவார், சமஸ்கிருத எழுத்தாளர் காளிதாசனின் படைப்புகளை ஆங்கில பார்வையாளர்களுக்கு மொழி பெயர்த்தார். சுந்தரம் 1968 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்பட்ட இரண்டாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.[3]
சுந்தரம் , சென்னை மாகாணத்திலுள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] அவர் 1904 இல்,ஒரு பேராசிரியருக்குப் பிறந்தார். இவர், ஆக்ஸ்போர்டிலுள்ள மாநிலக் கல்லூரி மற்றும் கிறிஸ்டி சர்ச்சின் முன்னாள் மாணவராவார். இவர் 1925 இல் இந்திய சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) பயிற்சிக்கு தன்னைப் பதிவு செய்தார். சுந்தரம் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி லட்சுமி 1934 இல் இறந்தார். பின்னர் அவர் கலைஞரான அமிர்தா ஷெர்கில்லின் சகோதரி இந்திரா ஷெர்கில் என்பவரை மணந்தார். இவர்களுக்கு விவன் என்கிற ஒரு மகன் உண்டு. விவன் ஒரு கலைஞனாக இருந்தார்.
சுந்தரம் 1927 ஆம் ஆண்டு மத்திய மாகாணங்களில் தனது ஐசிஎஸ் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், 1931 ஆம் ஆண்டு நாக்பூரில் ஒரு சீர்திருத்த அதிகாரியாக மாகாண மட்டத்தில் பணியாற்றுவதற்கு முன்னர் அவர் மாவட்டங்களில் முதன்முதலில் பணியாற்றினார். அங்கு, நீதிபதி ஆணையராக இருந்த சர் ராபர்ட் மக்னியர் பின்னர் சுந்தரம் பற்றிக் குறிப்பிடும் போது, இவர், சில இளைய சட்ட வல்லுநர்களில் ஒருவராக இருந்தார் என கூறியுள்ளார்.
1935 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சட்டம் அமல்படுத்தப்பட்டது, இது இந்திய மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தை அமைப்பதற்கு வழிவகுத்தது. இந்தியா சுதந்திரம் கொடுக்கும் திசையில் முதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. சுந்தரம் அதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.[4] பிரித்தானிய அதிகாரத்துவம் இந்தியாவை ஆளும் இந்தியாவின் தற்போதைய கட்டமைப்புகளை மறுசீரமைக்க விரும்பியது. ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான (மன்னர் அரசு) பிரித்தானிய இந்தியாவின் தற்போதைய எல்லைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டனர். இந்த ஆவணத்தை தயார் செய்ய சுந்தரம் 1936 இல் நியமிக்கப்பட்டார்.[5][6] இந்த வெள்ளை அறிக்கை இந்தியாவை மறுசீரமைப்பதற்கான அடிப்படைத் தளமாக ஆனது; பட்டேல் மற்றும் வி.பி. மேனன் ஆகியோர், உடன்படிக்கைக்குரிய ஓய்வூதியத்திற்காக இந்திய யூனியனுடன் பிரபுக்களை அனுமதிப்பதை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தினர். சுந்தரம் இந்த வேலையை மேற்பார்வையிட முடிந்தது.[7]
1958 ஆம் ஆண்டு சட்ட மந்திரி பதவி முடிவடைந்த பின்னர் சுந்தரம் தலைமை தேர்தல் ஆணையர் பதவி வகித்த இரண்டாவது நபர் ஆவார்.[8] 1967ஆம் ஆண்டில், 1968இல் சட்ட ஆனையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதே ஆண்டில் பத்ம விபூசண் விருது பெற்றார். பின்னர், 1971இல், அசாம் மற்றும் நாகாலாந்து எல்லைப் பிரச்சினையில் உதவுவதற்காக மீண்டும் ஆலோசரகராக பணியேற்றார். சுந்தரம், செப்டம்பர் 23, 1992 அன்று, வயது முதிர்வினால் புது தில்லியில் இறந்தார்.[9]