கல்லூரிக் கல்வித் திறன் சோதனை (College Scholastic Ability Test or CSAT) தென் கொரியா நாட்டில் பள்ளிக் கல்வியில் இறுதி படிப்பில் தேர்வான மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான திறனறிதல் தேர்வாகும்.[1][2] இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் வியாழக்கிழமை அன்று நடத்தப்படும்.[3] இத்தேர்வு ஐந்து பாடங்களில், எட்டு மணி நேரம் தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்தேர்வுக்கு இடையிலும் 20 நிமிடங்கள் இடைவேளை உண்டு. இத்தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கப்படுகிறது
கணிதப் பிரிவில் உள்ள 9 வினாக்களைத் தவிர, அனைத்து வினாக்களுக்கு பல விருப்பங்கள் உள்ளது, அவை குறுகிய பதில்களைக் கொண்டது. [4]
வ எண் | பாடம் | நேரம் | கேள்விகளின் எண்ணிக்கைகள் |
புள்ளிகள் | குறிப்பு |
---|---|---|---|---|---|
தேர்வாளர்கள் காலை 8.10 மணியளவில் தேர்வுக் கூடங்களில் இருக்க வேண்டும். | |||||
1 | தேசிய மொழி (கொரிய மொழி) | 08:40–10:00 (80 நிமிடங்கள்) | 45 | 100 | கேள்வி எண் 1–17:படித்தல் கே எண் 18–34: இலக்கியம் கே எண் 35–45: விருப்பமானவை (தேர்வாளர்கள் பேச்சு மற்றும் எழுத்து அல்லது மொழி மற்றும் ஊடகம் ஆகியவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டும்) (ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்) |
இடைவேளை: 10:00–10:20 (20 நிமிடங்கள்) | |||||
2 | கணக்கியல் | 10:30–12:10 (100 நிமிடங்கள்) | 30 | 100 | கே எண் 1–22: கணக்கியல் I, கணக்கியல் II கே எண் 23–30: விருப்பமானவை (தேர்வாளர்கள் நுண்கணிதம், வடிவவியல் அல்லது நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய வேண்டும்)
|
மதிய உணவு நேரம்: 12:10–13:00 (50 நிமிடங்கள்) | |||||
3 | ஆங்கில மொழி | 13:10–14:20 (70 நிமிடங்கள்) | 45 | 100 | கேள்வி எண் 1–17: கேட்டல் (25 நிமிடங்கள்) கேள்வி எண் 18–45: படித்தல் (ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்) |
இடைவேளை: 14:20–14:40 (20 நிமிடங்கள்) | |||||
4 | கொரிய வரலாறு | 14:50–15:20 (30 நிமிடங்கள்) | 20 | 50 | கட்டாயப் பாடம்
(ஒரு கேள்விக்கு 2 or 3 புள்ளிகள்) |
கொரிய வரலாற்று கேள்வி மற்றும் பதில் தாள்களை சேகரித்தல் முதல் துணை பாடத் தாள்களை வழங்குதல் |
15:20–15:35 (15 நிமிடங்கள்) | துணைப் பாடம் (கள்) எடுக்காத தேர்வாளர்கள் காத்திருப்பு அறைக்குச் செல்லவேண்டும்) | |||
முதல் துணைப் பாடம் | 15:35–16:05 (30 நிமிடங்கள்) | 20 | 50 | விண்ணப்பதாரர்கள் சமூக அறிவியல், அறிவியல் அல்லது தொழிற்கல்வி ஆகியவற்றிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்வு செய்யலாம்
(ஒரு கேள்விக்கு 2 அல்லது 3 புள்ளிகள்) | |
ஒவ்வொரு பாடத்தின் கேள்வி-பதில் தாள்களை சேகருக்கும் நேரம் 2 நிமிடங்கள் | 16:05–16:07 (2 நிமிடங்கள்) | ||||
இரண்டாவது துணைப்பாடம் | 16:07–16:37 (30 நிமிடங்கள்) | 20 | 50 | ||
இடைவேளை: 16:37–16:55 (18 நிமிடங்கள்) | |||||
5 | இரண்டாவது வெளிநாட்டு மொழிகள்: சீன மொழி, ஜெர்மானியம், எசுப்பானியம், ஜப்பானியம், உருசியம், அரபு மொழி | 17:05–17:45 (40 நிமிடங்கள்) | 30 | 50 | கேட்டல் சோதனை இல்லை
(ஒரு கேள்விக்கு 1 அல்லது 2 புள்ளிகள்) |