சம்வர்த்தனம் அல்லது கல்வி முடித்தல் சடங்கு (Samavartana (சமக்கிருதம்: समावर्तन, இந்து சமயத்தவர் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் ஒன்றாகும். 12 அல்லது 21 ஆண்டுகள் குருவிடம் கல்வி பயின்று முடித்த மாணவர்கள் குருகுலத்திலிருந்து விடைபெறும் நாள் மற்றும் திருமணத்திற்கு தயாராகும் சடங்கு ஆகும்.[1][2] இந்த சடங்கின் இறுதியில் மானவர்கள் குருவுக்கு குரு தட்சணை வழங்குவர்.[3]
பிரம்மசார்ய பருவத்திலிருந்து கிரகஸ்த பருவத்திற்கு செல்லத் தயாராக இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள உறுதிமொழிகள் குறித்து தைத்திரீய உபநிடதம் அறம், பொருள், இன்பம் அடைவதற்கு கீழ்கண்டவற்றை கடைபிடிங்கள் எனக்கூறுகிறது.
சத்தியத்திலிருந்து ஒருபோதும் தவறாதே,
தர்மத்தை விட்டு ஒருபோதும் தவறாதே
உங்கள் நல்வாழ்வை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்,
உங்கள் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்,
உங்கள் செழிப்பை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்,
தன்னைப் பற்றிய ஆய்வு மற்றும் வேதங்களின் வெளிப்பாட்டை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
தாய் யாருக்கு கடவுளாக இருக்கிறாரோ, அவருக்கு தந்தையாக இருங்கள்.
ஒரு ஆச்சாரியர் (ஆன்மீக வழிகாட்டி) கடவுளைப் போன்றவர்
விருந்தாளி கடவுளைப் போல் இருப்பவராக கருதுங்கள்.