களவாணி | |
---|---|
இயக்கம் | A.சற்குணம் |
தயாரிப்பு | சேராலி பிலிம்ஸ் |
இசை | எஸ். எஸ். குமரன் |
நடிப்பு | விமல், ஓவியா |
வெளியீடு | 25.06.2010 |
மொழி | தமிழ் |
களவாணி சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, ஜூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். தஞ்சாவூர் மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.