கல்லம் சதீசு ரெட்டி | |
---|---|
![]() | |
தேசியம் | ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | புர்டூ பல்கலைக்கழகம் உசுமானியா பல்கலைக்கழகம் |
பணி | டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் தற்போதைய தலைவர்[1] |
உறவினர்கள் | கள்ளம் அஞ்சி ரெட்டி (தந்தை) ஜி. வி. பிரசாத் (மைத்துனர்) அல்லா அயோத்தி ராமி ரெட்டி (மைத்துனர்) |
கல்லம் சதீசு ரெட்டி (Kallam Satish Reddy) ஓர் இந்திய வணிக நிர்வாகியும், டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் தற்போதைய தலைவருமாவார். [2] [3] இவர், 1993 இல் டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். 1997 இல் நிர்வாக இயக்குநராக உயர்த்தப்பட்ட இவர், மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலிருந்து, பல்வேறு மருந்துகளைத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். [4] [5]
ரெட்டி உசுமானியா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் இளம் அறிவியல் பட்டமும், பர்டூ பல்கலைக்கழகத்தில் மருந்தாக்க வேதியியலில் அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.