கவீந்திரன் கோடீஸ்வரன் Kaveendran Kodeeswaran | |
---|---|
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பதவியில் 17 ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 28, 1971 அக்கரைப்பற்று, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன் (Ariyanayagam Kaveenthiran Kodeeswaran, ரொபின் எனவும் அழைக்கப்படுகிறார், பிறப்பு:28 மே 1971)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கோடீசுவரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.[2] இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 17,779 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][4] இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளராக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 11,962 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[5]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2015 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 17,779 | தெரிவு[6] | ||
2020 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 27,834 | தெரிவு செய்யப்படவில்லை[7] | ||
2024 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 11,962 | தெரிவு[5] |