கவுசலேந்திர குமார்

கவுசலேந்திர குமார், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959-ஆம் ஆண்டின் ஜனவரி பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான தானா இஸ்லாம்பூர், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. இவர் நாலந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4467 பரணிடப்பட்டது 2013-04-07 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை