கவுசல்யா அணை | |
---|---|
கவுசல்யா அணை | |
அதிகாரபூர்வ பெயர் | கவுசல்யா அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பிஞ்சூர், அரியானா |
புவியியல் ஆள்கூற்று | 30°46′30″N 76°54′50″E / 30.77500°N 76.91389°E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 2008 |
திறந்தது | 2012 |
அணையும் வழிகாலும் | |
வகை | நில நிரவல் அணை |
தடுக்கப்படும் ஆறு | கவுசல்யா ஆறு |
உயரம் | 34 m (112 அடி) |
நீளம் | 700 m (2,300 அடி) |
கவுசல்யா அணை (Kaushalya Dam)(இந்தி: कौशल्या बांध) புவி நிரப்பு அணையாகும். இந்த அணை கவுசல்யா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. கவுசல்யா ஆறு காகர் நதியின் துணை ஆறாகும். [1] இது பண்டைய தொன்மையான சரசுவதி ஆற்றுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது. இது அரியானா மாநிலம் பிஞ்சூரில் 2008 மற்றும் 2012 ஆண்டுகளுக்கிடையே நீர் தேவைக்காகக் கட்டப்பட்டது.[2]
கவுசல்யா தடுப்பணையும் நீர்த்தேக்கமும் கவுசல்யா ஆற்றில் சண்டிகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3] இது பஞ்ச்குலா மற்றும் கோல் கை ரைட்டன் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்[4] பிஞ்சூர் நகரத்திலிருந்து கி.மீ. 5 கி.மீ. தொலைவிலும் [5] மற்றும் பிஞ்சூருக்கு அருகிலுள்ள பிர் ஷிகர்கா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
காகர் ஆற்றில் அணைக்கான முதல் திட்டம், 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசினால் அம்பாலா கன்டோன்மென்ட்டுக்கு குடிநீரை வழங்க முன்மொழியப்பட்டது.[6]
முன்மொழிவில் ஒரு அணை கட்ட மட்டும் 1960களில் பரிசீலிக்கப்பட்டது. காகர் நதியில் சண்டிமந்திருக்கு அருகே கும்தலாவில் அணைக்கட்டி சண்டிகர் நகருக்கு நீர் வழங்கவும் பஞ்சாபில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் 1999ஆம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனைச் செயல்படுத்தும் போது 4,000 ஏக்கர்கள் (1,600 ha) நீரில் மூழ்கும் என்றும் ஏராளமான மக்களை இடம்பெயரச் செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.[2]
இதன் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டில், காகர் ஆற்றின் துணை நதிகளில் தொடர்ச்சியாகச் சிறிய அணைகள் கட்டும் திருத்தப்பட்ட திட்டத்திற்கு அரியான அரசு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில் கவுசல்யா அணையின் கட்டுமானம் 2008இல் தொடங்கப்பட்டு 2012இல் நிறைவடைந்தது.[2][6]
அரியானா அரசால் கட்டப்பட்ட கவுசல்யா அணை 700 மீட்டர்கள் (2,300 அடி) நீளமும் 34 மீட்டர்கள் (112 அடி) உயரமும் உடைய பூமி நிரம்பிய அணை ஆகும்.[6] இந்த திட்டத்திற்கு 2005 திசம்பரில் அரியானா அரசு ரூ .51.37 கோடி செலவில் ஒப்புதல் அளித்தது.[7]
இது ஓர் முக்கியமான ஈரநிலமாகும். இது பல ஆபத்தான புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாகும் உள்ளது.[8]