கவுண்டர்

கவுண்டர் (Gounder) என்ற சொல் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கருநாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும்.

வரலாறு

[தொகு]

கவுண்டர் என்பது ராஷ்டரகூட அரசர்கள், நுளம்ப பல்லவ வேந்தர்கள், ஆட்சியில் நாடு அல்லது ஊர் அதிகாரம் பெற்றவர். காமுண்டன் எனச் சொல்லப்பட்டார். இப்பெயர் இந்நாட்டில் வந்து காமிண்டன் என்று திரிந்தது போலும் - காமுண்ட - காமிண்ட என்னும் பெயர், கிராமப் பெரிய தனக்காரர்கள் பெற்று நாளடைவே காவண்ட - காவுண்ட என்று, பின் கவண்ட - கவுண்ட என்று மருவிற்று என்பது கல்வெட்டு ஆய்வாளர்கள் கருத்து. இது போலவே கன்னட தேசத்தார் கவுடு, கௌடா என்று வழங்குகிறார்கள் - கவுண்டிக்கை என்பது ஊர்ப்பெரிய தனத்தைக் குறித்ததாக வழக்கத்திலிருக்கிறது. நாட்டுக் கவுண்டன் - ஊர்க் கவுண்டன் என்பதாலறியலாம். முதன்மையாளர் கொள்ளும் பெயரை அவர்கள் சுற்றத்தவர்களும் பாராட்டலாயினர். அங்கங்கு ஊர் முதன்மை பெற்றுள்ளவர்களான கொங்கு வேளாளர், ஊராளி கவுண்டர்,வேட்டுவர், படையாட்சி, குறும்பர் மற்றும் வொக்கலிகர் முதலிய வகுப்பினருள்ளும் கவுண்டர் என்று வழங்கி வருதல் காண்கிறோம்.[1][2] இவர்களை தவிர கர்நாடகத்திலிருந்து வந்து குடியேறிய கன்னட இனத்தை சேர்ந்த வொக்கலிகர் (கவுடா) என்பர் உளர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கொங்கு மண்டல சதகம், பாடல் 67, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை, சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008, பக்கம் 102-104
  2. "கவுண்டர்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.

வெளி இணைப்புகள்

[தொகு]