கா. காதர் மஸ்தான் K. Kader Masthan நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகத்து 2020 | |
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் | |
பதவியில் 12 சூன் 2018 – 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காதர் காதர் மஸ்தான் 1 நவம்பர் 1971 |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வாழிடம் | கண்டி வீதி, தேக்கவத்தை, வவுனியா |
காதர் காதர் மஸ்தான் (K. Kader Masthan, பிறப்பு: 11 சனவரி 1971) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சரும் ஆவார்.[1]
காதர் மஸ்தான் 1971 சனவரி 11 இல் பிறந்தார்.[1]
காதர் மஸ்தான் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3] 2018 சூன் மாதத்தில் இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் இந்து மத விவகார பிரதி அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.[4]
காதர் மஸ்தான் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இலங்கை பொதுசன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7] இவர் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் 2020 ஆகத்து 12 இல் நியமிக்கப்பட்டார்.[8]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2015 நாடாளுமன்றம் | வன்னி மாவட்டம் | இலங்கை சுதந்திரக் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 7,298 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம் | வன்னி மாவட்டம் | இலங்கை பொதுசன முன்னணி | - | 13,454 | தெரிவு |