இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பொங்கைகான் மாவட்டத்தில் அபயபுரிக்கு அருகில் ககோய்சனா வனக்காப்பகம் அமைந்துள்ளது. இந்த காடு தங்க நிற மந்திக்கு பிரபலமானது. [1] இந்த வனக்காப்பகம் 17.24 கிமீ 2 பரப்பில் அமைந்துள்ளது. [2]
இந்த காட்டில் பட்டியல் 1ல் உள்ள ஆபத்தான 60 தங்க நிற மந்திகள் உள்ளன.[1] இந்த வனத்தினை சரணாலயமாக மாற்ற மக்களும் அரசு சாரா நிறுவனங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.[3] இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் "அரிய இனங்கள்" என்ற பிரிவில் தங்க நிற மந்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[4] இந்த வனம் அரிதான மற்றும் மிகவும் ஆபத்தான உயிரினங்களான கரடிப் பூனை, காட்டுக் கோழி, எறும்புத்தின்னி, இருவாச்சி, சிறுத்தை, முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, சிறுத்த பெருநாரை, பெருநாரை, பறக்கும் அணில், உடும்பு, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, புனுகுப்பூனை, காட்டுப் பூனை, இந்தியப் பாலைவனப் பூனை உள்ளிட்ட விலங்குகளின் உறைவிடமாக உள்ளது.
இங்குள்ள விலங்கினங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. [5]
இந்த வனமானது 1966ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது.[6] இது அய் பள்ளத்தாக்கு பிரிவின் கீழ் வருகிறது. இந்த வனத்தினை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கக் கோரி குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [1]