காக்கா முட்டை | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். மணிகண்டன் |
தயாரிப்பு | தனுஷ் (நடிகர்) வெற்றிமாறன் |
கதை | எம். மணிகண்டன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | இரமேஷ் இரமேஷ் திலகநாதன் விக்னேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | மணிகண்டன் |
படத்தொகுப்பு | கிஷோர் |
கலையகம் | வண்டபார் பிலிம்சு கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்[1] |
வெளியீடு | 5 செப்டம்பர் 2014(டொரொண்டோ பன்னாட்டு திரைப்பட விழா) 5 சூன் 2015 (உலகளவில் திரையரங்குகளில்) |
ஓட்டம் | 99 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காக்கா முட்டை 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சென்னை நகரின் சேரிப் பகுதியில் வாழும் இரண்டு ஏழைச் சிறுவர்கள் பணக்காரர்கள் உண்ணும் இத்தாலிய உணவான பீட்சாவைச் சாப்பிட வேண்டும் என ஆசை கொள்கின்றனர் என்பது இத்திரைப்படத்தின் மையக் கருத்தாகும். கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[2] மேலும் இத்தாலியின் ரோம் நகரம் மற்றும் துபாய் போன்ற நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் தேர்வாகித் திரையிடப்பட்டது.