காங்கரியா ஏரி Kankaria Lake | |
---|---|
காங்கரியா திருவிழாவின்போது ஏரி | |
அமைவிடம் | அகமதாபாத், குசராத்து |
ஆள்கூறுகள் | 23°00′22″N 72°36′04″E / 23.006°N 72.6011°E |
ஏரி வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
கரை நீளம்1 | 2.25 km (1.40 mi) |
Islands | நகினா வாடி |
குடியேற்றங்கள் | அகமதாபாத் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
காங்கரியா ஏரி (Kankaria Lake) குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பகுதியான மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றிலும் நீர் விளையாட்டுகளும், மனமகிழ்ச்சிக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காங்கரியா திருவிழா என்னும் ஒரு வாரத் திருவிழா டிசம்பரின் இறுதி வாரத்தில் நடைபெறும். அந்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.[1] கிட்ஸ் சிட்டி, விலங்குக் காப்பகம், உணவகக் கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன.