காங்ரா தேயிலை: இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தேயிலை ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து காங்ரா பள்ளத்தாக்கில் கருப்பு தேயிலை மற்றும் பச்சைத் தேயிலை இரண்டும் தயாரிக்கப்படுகின்றன. காங்க்ரா தேயிலை 2005 இல் புவியியல் அடையாள அந்தஸ்து வழங்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காங்ரா பகுதியில் தேயிலை முதன்முதலில் வளர்க்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டில் சாத்தியக்கூறுகளுக்கான கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதி முழுவதும் தேயிலைத் தோட்டத்திற்கு ஏற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது. சீன வகைத் தேயிலையான காமெலியா சினென்சிஸ் இப்பகுதி முழுவதும் நடப்பட்டது. பிற இடங்களில் இதன் நடவு தோல்வியுற்ற போதிலும், பாலம்பூர் மற்றும் தர்மசாலாவில் இது வெற்றிகரமாக மாறியது.[1] 1880 களில், காங்ரா தேயிலை மற்ற இடங்களிலிருந்த தேயிலையை விட உயர்ந்ததாகக் கருதப்பட்டது, மேலும் காபூல் மற்றும் மத்திய ஆசியாவில் இத்தேயிலை விற்பனை செய்யப்பட்டது. 1882 இல், காங்ரா மாவட்டத்தின் அரசிதழில் இந்தியாவின் காங்க்ரா தேயிலையானது "இந்தியாவின் வேறு எந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையைக் காட்டிலும் மேன்மையானது." எனப் பதிவு செய்யப்பட்டது. 1886 மற்றும் 1895 ஆம் ஆண்டுகளில், லண்டன் மற்றும் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் காங்ரா தேயிலை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றது.
இருப்பினும், 1905 காங்க்ரா பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான இறப்புகள் ஏற்பட்டது. மேலும் பல தொழிற்சாலைகள் அழிந்துபோயின, ஆங்கிலேயர்கள் அங்குள்ளவர்களைத் தோட்டங்களை விற்று அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் புதிய உரிமையாளர்களால் சிறிய அளவிலான காங்ரா தேயிலை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.[2]
21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவுக்குப் பிறகு, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வணிகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இங்கு ஆராய்ச்சி மற்றும் நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன,[3][4][5] 2012 ல், வணிக மற்றும் கைத்தொழில் துறையின் மத்திய அமைச்சரான ஆனந்த் சர்மா இந்தியத் தேயிலை வாரியத்தின் பாலம்பூர் பிராந்திய அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இது காங்ரா தேயிலைத் தொழிலின் ஒரு படிக்கல்லாகவும் அதன் மீள் ஒருங்கிணைப்பு முயற்சியில் கணிசமான முன்னேற்றத்திற்கான முக்கிய நடவடிக்கையாகவும் ஆனது [6]
காங்ரா கருப்புத் தேயிலை மற்றும் பச்சை தேயிலை இரண்டும் இங்கு பயிரிடப்பட்டாலும், கருப்பு தேயிலை உற்பத்தியி 90 விழுக்காடாக உள்ளது. மே 2015 நிலவரப்படி, தர்மசாலா, ஷாப்பூர், பாலம்பூர், பைஜ்நாத் மற்றும் ஜோகிந்தர்நகர் இடையே சுமார் 2,312 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 5,900 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன; இவற்றின் ஆண்டு உற்பத்தி 8.99 லட்சம் கிலோ.[7]
காங்க்ரா தேநீர் அதன் தனித்துவமான நிறம் மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது.[7] இப்பகுதியின் புவியியல் பண்புகளே தேயிலையின் தனித்துவமான பண்புகளுக்குக் காரணமாகும்.[2] 2005 இல் வடிவமைப்புகளுக்கான காப்புரிமைப் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம், வடிவம் மற்றும் வர்த்தக முத்திரைகள் நிறுவனம் சென்னை, ஆகியவற்றால், (பதிவு மற்றும் பாதுகாப்பு) புவியியல் அறிகுறிகள் சட்டம் 1999 இன் படி பொருட்களுக்கான புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.[8]
உண்மையில் காங்க்ரா தேயிலைகள் அதன்சுவை தனித்துவமான சுவைக்காக விற்பனையாகின்றன. . இங்கு வளர்க்கப்படும் சீன கலப்பின வகைத் தேயிலையானது மிகவும் வெளிர் நிறம்கொண்டா தேநீரை உற்பத்தி செய்கிறது, காங்ராவில் எந்தவொரு இடத்திலும் சி.டி.சி எனப்படும் (நொறுக்கப்பட்ட, திரும்பிய, சுருண்ட) தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே காங்ரா தேயிலை இந்தியாவின் தரமான தேநீர் என அழைக்கப்படுகிறது.[9]
தேயிலை சுற்றுலா மெதுவாக காங்க்ராவிலும் அதைச் சுற்றியும் களமிறங்கத் தொடங்குகிறது. பாலம்பூர் மற்றும் தர்மசாலாவில் உள்ள பல தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் தொழிற்சாலை சுற்றுப்பயணங்களையும், தேயிலை பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு வீட்டு தங்குமிடங்களையும் வழங்குகின்றன. தர்மசாலா தேயிலை நிறுவனம் தனது தொழிற்சாலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது, இது மான் தேயிலைத் தோட்டத்திலுள்ள தனது தொழிற்சாலையிலிருந்து தொடங்குகிறது. இதேபோல், பாலம்பூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிற்சாலை சுற்றுப்பயணங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குகிறது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)