காசி யாத்திரை | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். எஸ். சேதுராமன் ஸ்ரீதேவி ஆர்ட்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் ஜெயா சோ ராமசாமி |
வெளியீடு | சூன் 1, 1973 |
நீளம் | 3915 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காசி யாத்திரை (Kasi Yathirai) எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ். எஸ். சேதுராமன் இப்படத்தை தயாரித்தார். வி.சி. குகநாதன் இந்த படத்தின் கதையை எழுதினார். சங்கர் கணேஷ் இசையமைக்க, குமாரி பத்மினி, ஜெயா, மனோரமா (இரட்டை வேடம்), எம். ஆர். ஆர் வாசு, சோ ராமசாமி, வி. கே. ராமசாமி , ஸ்ரீகாந்த், சுருளி ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]கமல்ஹாசன் இந்த படத்தில், தங்கப்பனின் கீழ் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார்.[1] திரையரங்குகளில் இத்திரைப்படம் 100 நாள்களுக்கு மேல் ஓடியது.[3]
பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பரமசிவம் பிள்ளை (வி. கே. ராமசாமி) ஊருக்குத் திரும்புகிறார். இராமு, உமாவின் சித்தப்பா பரமசிவம் பிள்ளை ஆவார். பரமசிவம் பிள்ளை பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால், தன் அண்ணன் மகனையும் மகளையும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறார். மாறாக, இராமு சீதைவைக் காதலிக்க, உமாவும் வேறொரு ஆணைக் காதல் செய்கிறார்கள். சித்தப்பா பரமசிவத்தின் அனுமதியைப் பெற சங்கரின் (சுருளி ராஜன்) உதவியை நாடுகிறான் இராமு. சங்கரும் சமையல்காரனாக வேடமிட்டு பரமசிவத்தைத் தன் வசப்படுத்த முயற்சித்தும் தோல்வியைச் சந்திக்கிறான். அதனால், மனோரமாவின் உதவியுடன், பரமசிவத்திற்கு ஒரு மொட்டைக் காதல் கடிதம் எழுதி அனுப்புகிறான் சங்கர். பரமசிவத்தின் உதவியாள் அந்தக் காதல் கடிதத்தை அவருக்கு படித்துக் காட்டுகிறான். அதைச் சற்றும் பிடிக்காதவாறு நடந்துகொண்டாலும், அந்த கடிதத்தில் இருக்கும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பரமசிவத்திற்கு எழுகிறது. அதன் பின்னர் ஏற்படும் சம்பவங்களை மிகவும் நகைச்சுவையாகப் படமாகியிருந்தார் இயக்குநர்.
இப்படத்தின் இசையை சங்கர் கணேஷ் இசையமைத்தனர். வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதினர்.
எண். | பாடல்கள் | பாடகர் | நீளம் |
---|---|---|---|
1 | "ஆஞ்சநேயா அனுமந்தையா" | எஸ். வி. பொன்னுசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் , கோவை சுந்தரராஜன், பி.எஸ்.சசிரேகா | 6:18 |
2 | "அமராவதி நெஞ்சமே" | எஸ்.வி பொன்னுசாமி, மனோரமா | 8:36 |
3 | "அழகின் அவதாரம்" | எல்.ஆர். ஈஸ்வரி | 3:00 |
4 | "அம்மாடியோ சித்தப்பா" | எஸ்.பி. பாலசுப்ரமணியம், ராஜேந்திர கிருஷ்ணா, கோவை சுந்தர் ராஜன், எல்.ஆர் ஈஸ்வரி , பி. ௭ஸ். சசிரேகா | 3:31 |