காசியப் பந்து (Kashyap Bandhu, மார்ச் 1899 - 18 திசம்பர் 1985), காசுமீரில் சிறீநகரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள குயர் எனும் இடத்தில் பிறந்தார், இவரது பெற்றோர்கள் இவருக்கு தாரா சந்த் என்று பெயரிட்டனர். இவர் ஓர் அரசியல் தலைவரும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.[1][2][3]
காசியப் 1931 இல் யுவக் சபையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 20 ஆகும். குவெட்டாவில் நகரில் ஆரிய சமாஜத்தை தழுவினார். இவர் தனது இயற் பெயரான தாரா சந்த் கவுல் என்ற பெயரை காசியப் பந்து என்று மாற்றிக்கொண்டார். இவர் லாகூரில் உள்ள ஓர் சமாசிஸ்ட் கல்வி நிறுவனத்தில் விசுவ பந்துவின் கீழ் சமசுகிருதம் மற்றும் புனித நூல்களை படித்தார். 1929 இல் பிரோசுபூரில் குடியேறிய காசுமீர் பண்டிதர் விசுணு தத்தாவின் மகள் விமலா தேவியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.[4][3]
சிறிது காலத்திற்குப் பிறகு அவர் வேலையை விட்டுவிட்டு லாகூருக்குச் சென்றார். அவர் ஆரிய சமாசத்தின் செல்வாக்கின் கீழ் வந்து லாகூரில் உள்ள வ்ரஜானந்த் ஆசிரமத்தில் சேர்ந்தார்.[5]
பந்து 1931 இல் காசுமீருக்குத் திரும்பினார். காசுமீருக்குத் திரும்பிய பிறகு அவர் பிரேம் நாத் பசாசு (Prem Nath Bazaz), சிவ் நரேன் ஃபோதேதர் (Shiv Narain Fotedar) மற்றும் சியா லால் கிலம் (Jia Lal Kilam) ஆகியோருடன் இணைந்து "யுவக் சபா" (Yuvak Sabha) ஒன்றை ஏற்பாடு செய்தார்.[6] பெண்களின் பிரச்சினைகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தார். காஷ்மீரி பண்டிட் பெண்களிடையே ஆடையில் மாற்றம், ஒரு புதிய தோற்றம், பெண்கள் விகாரமான மற்றும் அன்னிய ஆடைகளை அணியும் பழக்க வழக்கங்களை நிராகரிக்குமாறு கேட்டுக் கொண்டார். [7][3]
{{cite book}}
: CS1 maint: date format (link)
{{cite book}}
: CS1 maint: date format (link) CS1 maint: extra punctuation (link)
{{cite book}}
: CS1 maint: date format (link) CS1 maint: extra punctuation (link)