Expressway 21 | |
---|---|
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை Kajang–Seremban Highway Lebuhraya Kajang–Seremban | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை நிறுவனம் Lebuhraya Kajang-Seremban Sdn. Bhd. (Lekas) | |
நீளம்: | 44.3 km (27.5 mi) |
பயன்பாட்டு காலம்: | 2002 – |
வரலாறு: | 2009-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | காஜாங் பெர்டானா சந்திப்பு காஜாங், சிலாங்கூர் Kajang Perdana Interchange |
காஜாங் மாற்றுவழிச் சாலை காஜாங் இணைப்பு விரைவுச்சாலை கூட்டரசு சாலை 1 (மலேசியா) பந்திங் செமினி சாலை நீலாய் பாஜம் சாலை கூட்டரசு சாலை 86 (மலேசியா) கூட்டரசு சாலை 51 (மலேசியா) செனாவாங் சந்திப்பு | |
தெற்கு முடிவு: | பாரோய் சந்திப்பு பாரோய், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோலாலம்பூர் செராஸ் காஜாங் செமினி பாஜம் நீலாய் மந்தின் தெமியாங் கோலா கிளாவாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kajang–Seremban Highway அல்லது LEKAS Highway; மலாய்: Lebuhraya Kajang–Seremban) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகரத்தையும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரத்தையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]
இது இரட்டை - மூன்று வழி நெடுஞ்சாலை (Dual Three Lane Highway). இதைக் காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலை என அழைப்பதும் உண்டு. இந்தச் சாலையின் நீளம் 44.3 கி.மீ. (27.5 மைல்).[2]
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை செமினி, பாஜம், மந்தின், தெமியாங் வழியாகச் சென்று சிரம்பான் உள்வட்டச் சாலையுடன் இணைக்கும் வகையில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகப் போக்குவரத்து நெரிசலைக் கொண்ட மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை; மற்றும் கோலாலம்பூர் - சிரம்பான் விரைவுச்சாலை; ஆகிய சாலைகளைத் தவிர்ப்பதற்கு இந்த காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மிகவும் பயனுள்ள சாலையாக அமைகின்றது.[3]
காஜாங்கில் இருந்து செத்துல் வரை ஆறுவழிப் பாதை
நடுத்தர வேக வரம்புகள் மணிக்கு 80 கி.மீ. (காஜாங் பெர்டானா - காஜாங் தெற்கு) (Kajang Perdana–Kajang South) மற்றும் (செத்துல்-பரோய்) (Setul–Paroi); மற்ற அனைத்து இடங்களிலும் அதிவேக வரம்புகள் மணிக்கு 110 கி.மீ.
அவசர தொலைபேசி
கடல் மட்டத்தில் இருந்து 258 மீட்டர் உயரத்தில் (சிரம்பான்) நகருக்கு அருகில் உள்ள மந்தின் மலை உச்சியில் அமைந்துள்ள செத்துல் சுங்கச் சாவடிதான் மலேசியாவின் மிக உயரமான சுங்கச்சாவடி ஆகும்.