காஜாங் வழித்தடம்


காஜாங் வழித்தடம்
Kajang Line
கேஎல்சிசி கோபுரங்கள் பின்னணியில்
Siemens Inspiro எம்ஆர்டி தொடருந்து
கண்ணோட்டம்
உரிமையாளர்எம்ஆர்டி நிறுவனம் (MRT Corp)
வழித்தட எண் (பச்சை)
வட்டாரம்கிள்ளான் பள்ளத்தாக்கு
முனையங்கள்
நிலையங்கள்32
இணையதளம்myrapid.com.my
சேவை
வகைபெரும் விரைவு தொடருந்து
அமைப்பு ரேபிட் கேஎல்
செய்குநர்(கள்)ரேபிட் ரெயில்
பணிமனை(கள்)சுங்கை பூலோ கிடங்ககம்
சுழலிருப்புசீமென்சு இன்சுபிரோ
58 நான்கு பெட்டி வண்டிகள்
அகலம்: 3.1 மீட்டர்
நீளம்: 90.18 மீட்டர்
பயணிப்போர்45.36 மில்லியன் (2022)
63.95 மில்லியன் (2019)
வரலாறு
திறக்கப்பட்டதுகட்டம் 1:
(16.12.2016)[1]
 SBK01  சுங்கை பூலோ
 KG04  குவாசா டாமன்சாரா
 KG14  செமாந்தான்
கட்டம் 2:
(17.07.2017)
 KG15  தேசிய அரும்காட்சியம்
 KG35  காஜாங்
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்47 கிமீ
உயர்த்தப்பட்டது: 37.5 கிமீ
நிலத்தடி: 9.5 கிமீ
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
மின்மயமாக்கல்750 V DC
கடத்தல் அமைப்புஓட்டுநர் இல்லாத தானியங்கி தொடருந்து இயக்கம்;
இயக்க வேகம்100 km/h ([convert: unknown unit])*
சமிக்ஞை செய்தல்Cityflo 650 CBTC

காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; மலாய்: Laluan Kajang அல்லது Laluan MRT Kajang) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு என அறியப்படுகிறது.[2]

பொது

[தொகு]

இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் (Rapid Rail) நிறுவனத்தின் ரேபிட் கேஎல் (RapidKL) சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.

சுங்கை பூலோவிற்கும் செமாந்தான் நிலையத்திற்கும் இடையிலான முதலாம் கட்டச் சேவைகள் 2016 டிசம்பர் 16-ஆம் தேதி தொடக்கப்பட்டன. தேசிய அரும்காட்சியகம் மற்றும் காஜாங் இடையிலான இரண்டாம் கட்டச் சேவைகள் 2017 சூலை 17-ஆம் தேதி தொடக்கப்பட்டன.

வரலாறு

[தொகு]

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும், 2006 ஆகத்து மாதம் 10 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதாக அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் முதலில் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.[3][4][5]

கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், பொதுப் போக்குவரத்தைப் பற்றி பொதுமக்கள் இடையே ஊக்குவிப்பதற்காகவும், ஒரு புதிய இலகு விரைவு தொடருந்து சேவை முன்மொழியப்பட்டது. அந்த வகையில் எல்ஆர்டி கோத்தா டாமன்சாரா–செராஸ் வழித்தடத் திட்டம் முதல் திட்டமாக இலக்கு வைக்கப்பட்டது. அந்த வழித்தடம் ஏறக்குறைய 30 கிமீ (19 மைல்) நீளம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.[6]}}

பிரசரானா மலேசியா

[தொகு]

இதற்கிடையில் கிளானா ஜெயா வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய புதிய வழித்தடங்களின் கட்டுமானப் பொறுப்பு பிரசரானா மலேசியா நிறுவனத்திற்கு (Syarikat Prasarana Nasional Berhad) வழங்கப்பட்டது.[7]

இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட கோத்தா டாமன்சாரா–செராஸ் புதிய வழித்தடத்தின் ஒருங்கிணைந்த செலவு RM 7 பில்லியன் வரை வரலாம் என மதிப்பிடப்பட்டது. அத்துடன் அந்த வழித்தடத்தில் 140 தொடருந்து வண்டிகள் சேவை செய்வதற்கும் திட்டமிடப்பட்டது.[8]

கோலாலம்பூர் மையத்தில் நிலத்தடி வழித்தடம்

[தொகு]

புதிய வழித்தடத்தை அமைக்க சூலை 2007-இல் மலேசிய போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் வழங்கியது. கோத்தா டாமன்சாராவில் இருந்து செராஸ் மற்றும் பாலாக்கோங் வரையிலான வழித்தட 2012-க்குள் முடிக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அறிவித்தார்.[9]

காஜாங் வழித்தடம், குவாசா டாமன்சாராவில் இருந்து காஜாங் வரையில் 47 கிலோமீட்டர் (29 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. இந்த வழித்தடம் கோலாலம்பூர் நகர மையத்தில் நிலத்தடியில் செல்கிறது. அந்த வகையில் கோலாலம்பூர் நகர மையத்தின் நிலத்தடியில் 7 நிலையங்கள் உள்ளன.[10]

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

[தொகு]

தொடருந்து நிலையங்கள்

[தொகு]
குறியீடு பெயர் நிலையம் திறப்பு நிலை
 KG04  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG05  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG05A  டெக்னோலஜி எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG06  கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG07  சூரியன் எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG08  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG09  பண்டார் உத்தாமா நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG10  தாமான் துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG11  செக்சன் 17 - - -
 KG12  பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG12A  புக்கிட் கியாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG13  பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG14  செமந்தான் எம்ஆர்டி நிலையம் 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG15  மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG16  பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG17  மெர்டேகா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG18A  புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG20  துன் ரசாக் எக்சேஞ்சு நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG22  இயோன் மலாரி எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG23  தாமான் பெர்தாமா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG24  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG25  தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG26  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG27  தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG28  செரி ராயா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG29  பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG30  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG31  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG32  தாமான் மெஸ்ரா - - -
 KG33  சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG34  காஜாங் அரங்கம் எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG35  காஜாங் தொடருந்து நிலையம் 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rapid Rail to take over SBK line ops from Dec 15
  2. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  3. "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line". The Star Online. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
  4. "PM picks '17-7-2017' start date for MRT phase two". The Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  5. "Phase 2 of Sg Buloh-Kajang MRT to be launched on July 17". Free Malaysia Today. 8 June 2017. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  6. "Rail Travel Expansion". The Star. 30 August 2006 இம் மூலத்தில் இருந்து 27 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181027063551/https://www.thestar.com.my/news/nation/2006/08/30/rail-travel-expansion/. 
  7. "Putting The Best Route Forward". The Star. 24 September 2006 இம் மூலத்தில் இருந்து 27 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181027064117/https://www.thestar.com.my/opinion/letters/2006/09/24/putting-the-best-route-forward/. 
  8. "Sungai Buloh-Kajang (SBK Line)". myMRT. Archived from the original on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  9. "New LRT Lines Approved". The Star. 7 July 2007 இம் மூலத்தில் இருந்து 27 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181027070200/https://www.thestar.com.my/news/nation/2007/07/07/new-lrt-lines-approved/. 
  10. "LRT Projects Set For Next Year". The Star. 20 April 2007 இம் மூலத்தில் இருந்து 27 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181027071203/https://www.thestar.com.my/news/nation/2007/04/20/lrt-projects-set-for-next-year/. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]