காட்டுசிகை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. pennata
|
இருசொற் பெயரீடு | |
Senegalia pennata (L.) Maslin | |
வேறு பெயர்கள் | |
|
காட்டுசிகை அல்லது இந்து (Senegalia pennata) என்ற இந்த தாவரம் இருபுற வெடிக்கனி வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாப் பகுதியாகும். இதன் காய் முடி உதிர்வதைத் தடுத்து செழிப்பாக வளர உதவுகிறது. இதன் பூக்கள் உருண்டையாக மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இவை அடர்த்தியாக இல்லாது கிளைகளில் விட்டுவிட்டு காணப்படுகிறது. இவற்றின் காய்கள் தடித்தும், நீட்டமாகவும் ஒன்றோடொன்று விதைகளை இணைத்தும் காணப்படுகிறது.[1]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இவற்றின் இலைகளை வறுத்து பொடிசெய்து உணவுகளில் பரிமாறுகிறார்கள்.[2] மேலும் பர்மா, லாவோஸ், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் இதன் இளந்தளிரை உணவுகளில் பயன்படுத்துகிறார்கள்.[3]