![]() | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | குசராத், மகாராட்டிரம் |
முக்கிய சேர்பொருட்கள் | கடலை மாவு, தயிர்[1] |
காண்டவி ( குஜராத்தி : ખાંડવી khāṇḍvī ), பட்டுலி, தகிவாடி அல்லது சுரலிச்சி வடி (மராத்தி : सुरळीची वडी [2] என்றெல்லாம் அழைக்கப்படும், கார தின்பண்டம் மகாராட்டிரம் மற்றும் குசராத் மாநிலங்களின் சமையல் வகையைச் சேர்ந்தது. இது ஒரு சுவையான சிற்றுண்டியாகும். [3] இது மஞ்சள், இறுக்கமாக உருட்டப்பட்ட கடிக்க ஏதுவான அளவிலான துண்டுகளைக் கொண்டுள்ளது. முதன்மையாக கடலை மாவு மற்றும் தயிர் ஆகியவற்றால் செய்யப்படுகிறது.
காண்டவி இந்தியா முழுவதும் எளிதாகக் கிடைக்கிறது. பொதுவாக பசி தூண்டும் தின்பண்டம் அல்லது சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது. பலர் இதை வீட்டில் தயாரிப்பதை விட உள்ளூர் கடைகளில் வாங்க விரும்புகிறார்கள். இது சில நேரங்களில் பூண்டு சட்னியுடன் பரிமாறப்படுகிறது . [4]
கண்டவி பொதுவாக இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் சில சமயங்களில் பச்சை மிளகாய் சேர்த்து பதப்படுத்தப்பட்ட கடலை மாவு மற்றும் தயிர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மாவை ஒரு தடிமனான விழுதாக தயாரிக்கவும். பின்னர் ஒரு தட்டையான மேற்பரப்பில் மெல்லியதாக பரப்பவும். [5] காண்டவிகளை பின்னர் 2-3 செமீ (1 அங்குலம்) கனத்திற்கு இறுக்கமான துண்டுகளாக உருட்டப்படுகிறது. [3] காண்டவி பொதுவாக கடிக்கும் அளவு இருக்கும். துருவிய சீஸ், சட்னி அல்லது கெட்ச்அப் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்த்து தாளிக்கலாம். இதை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ பரிமாறலாம்.