காதல் 2 கல்யாணம் | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | மிலிந்த் ராவு |
தயாரிப்பு | சுனிதா டடி |
கதை | மிலிந்த் ராவு பரத்வாஜ் ரங்கன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. எஸ். விநோத் |
படத்தொகுப்பு | லியோ ஜான் பவுல் |
கலையகம் | மிர்ச்சி மூவிஸ் ஈஸ்ட் கோஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் 2 கல்யாணம் (Kadhal 2 Kalyanam) (காதல் டு கல்யாணம் என படிக்கவேண்டும்) என்பது வெளிவராத தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநரான மிலிந்த் ராவு இயக்கினார். இப்படத்தின் நட்சத்திரங்களான ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் ரம்யா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயஸ்ரீ, நாகேந்திர பிரசாத், கஸ்தூரி, அனுஜா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் படத்துன் உரையாடல்களை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், முன் தயாரிப்புப் பணிகள் துவங்கியது. படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தது, 2010 சூலையில் முடிவடைந்தது. இந்த திரைப்படமானது மிர்ச்சி மூவிஸ் மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்தன. அவை தற்போது திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இல்லை.[2] எனவே படம் வெளியிடப்படவில்லை.
காத்ல் 2 கல்யாணம் படத்தின் திரைக்கதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் ஆர்யாவும் சத்யாவும் பல திரைக்கதைகளைப் பார்த்து இதை முடிவு செய்தனர். இந்தப் படத்தில் சத்யா ஒரு வானொலி தொகுப்பாளர் (ரேடியோ ஜாக்கி) பாத்திரத்தில் நடித்தார்.[6] இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தப் பின்னர் சத்யா மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்ரின் நடிப்பு பள்ளியில் "நடிப்பு திறன் வளர்ப்பு" பயிற்சி பெற்றார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் சத்யா ஒரு வானொலி நிலையத்தில் தொழில்முறை வானொலித் தொகுப்பாளர்களின் பணிகளை கவனித்தார்.[7][8] ரம்யா தனது மூன்றாவது படமான வாரணம் ஆயிரம் முடித்ததும் 2008 அக்டோபரில் இந்தப் படத்துக்கு ஒப்பந்தமானார்,[9][10] அவரது கதாபாத்திரத்திரமானது" பெருநிறுவன உலகில் தொழில் சார்ந்து இயங்கும், ஒரு சுயாதீனமான பெண்" என்று விவரிக்கப்பட்டது."[11] மேலும், முன்னணி நடிகை ஜெயஸ்ரீ 2008 நவம்பரில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்க கையெழுத்திட்டார். இது ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அவர் திரைத் துறைக்கு திரும்புவதை குறிப்பிடத்தக்கது.[12][13] 2008 திசம்பரில், நடிகை கஸ்தூரி ஒரு துணைப் பாத்திரத்திரமாக நாகேந்திர பிரசாத்தின் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்தார்,[14] இதனுடன் படத்தில் ஜான் விஜய் ஒரு குடிகாரனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.[15] 2009 ஆம் ஆண்டு மத்தியில் துவங்கிய படத்தின் படப்பிடிப்புகள் அறியப்படாத காரணங்களால் தடைபட்ட படப்படிப்பானது 2010 இல் மீண்டும் தொடங்கியது.[16][17]
படத்தின் பெரும்பகுதி வானொலி நிலையத்தில் நடப்பது என்பதால், கலை இயக்குநர் ராஜீவன் ஒரு வானொலி தொகுப்பாளர் மையத்தை சென்னையில் உருவாக்கினார்.[8] இந்த திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக, முருகனின் அறுபடை வீடுகளும் இடம்பெறும் விதத்தில் படம்பிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக படம்பிடிக்கப்பட்ட படமாகும். இது ஒரு பேருந்து சுற்றுப்பயணத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டது.[18] படத்துக்கு எடுக்கப்பட்ட பாடல்களில் ஒன்றான "வெள்ளைக் கொடி" என்ற பாடல், முருகனின் படைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நகரில் படமாக்கப்பட்டது. மேலும் நாகேந்திர பிரசாத் இயற்றிய பாடலான,[18] "தேடி வருவேன்" என்ற பாடல் புதுச்சேரியில் படம்பிடிக்கப்பட்டது.[19] 2010 சூலையில், இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன; செங்குன்றம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் "நா வெட்டப் போற ஆடு" என்ற பாடல் படமாக்கப்பட்டது. இதில் சத்யா, திவ்யா ஆகியோருடன் துணை நடிகர்கள் ஆடினர்.[18] இதைத் தொடர்ந்து கடைசிப் பாடலாக "இது காதலாய் இருந்திடுமோ" என்ற பாடல் படம்பிடிக்கப்பட்டது. இந்தப் பாடலை ஏவிஎம் படப்பிடிப்பு அரங்கில் சோடிக்கப்பட்ட காட்டில் எடுக்கப்பட்டது. இந்தப்பாடலுக்கான நடன அசைவுகளை தினேஷ் அமைத்தார்.[20] இந்தப் பாடல்களின் படப்பிடிப்பு முடிந்து, ஒன்றரை வருடங்கள் கழித்து படப்பிடிப்பு முடிவடைந்தது.
படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட நீண்ட காலத் தாமதத்துக்குப் பிறகு, மீர் மூவிஸ் மே 29 இல் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக அறிவித்தது. 2013 சூனில் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் துவங்கின.[21] இதனுடன் 2013 சூனில் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.[22] படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.[23]
இத்தப் படத்திற்கான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டார். படத்திற்கான பாடல்களுக்கான இசையமைப்பும், பாடல் பதிவும் 2009 மற்றும் 2010 இல் மேற்கோள்ளப்பட்டன. பாடல் வெளியீட்டின் போது இரண்டு வருடங்களுக்கு முன்னரே தனது பாடல் பதிவு செய்யப்பட்டதாக பாடகி சின்மயி கூறினார்,[24] மேலும் யுவன் சங்கர் 2010 செப்டம்பரிலேயே பாடல்களின் முதன்மைப் பதிவுகளை வழங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.[25] இருப்பினும், படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட நீண்ட கால தாமதத்தால், படத்தின் பாடல் தொகுப்பு 2011 மார்ச்சில் வெளியிடப்பட்டது. சோனி மியூசிகால் நேரடியாக மார்ச் 18 அன்று பாடல்கள் வெளியிட்ட போதிலும்,[26] பின்னர் ஒரு சிறப்பு வெளியீடாக ரேடியோ மிர்ச்சியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து பாடல்களும் வெளிவந்து ஒளிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆர்யா, சத்யா மற்றும் மிலிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த இசைத்தொகுப்பில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் இவை "இளமை மற்றும் புதியவை" என்று கூறினார்,[27] ஒரு பாடலை அவரே பாடியும் இருந்தார். இந்தப் பாடல் தொகுப்பில் பாடகர்-இசையமைப்பாளர் தோஷி சபரியின் முதல் தமிழ்ப் பாடல் இடம்பெற்றது, இது யுவன் சங்கருடனான கூட்டணியில வெளியான ஒய் படத்தில் இடம்பெற்ற "சீஹரி" என்ற பாடலுக்கு அடுத்து வெளியான அவரது இரண்டாவது பாடல். தெலுங்கு பாடகர் மற்றும் நடிகரான அனூஜ் குருவாரா இந்தப் படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்க வேண்டும், ஆனால் பாடல் தொகுப்பில் இடம் பெறவில்லை.[28]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் சினேகன், குறிப்பிட்டவை விடுத்து.
Track listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
1. | "இது காதலாய் இருந்திடுமோ" | பென்னி தயாள், சின்மயி | 5:18 | |||||||
2. | "நட்பின் கதைகளை" | கிரிஷ் | 3:55 | |||||||
3. | "நா வெட்டப்போற ஆடு" | யுவன் சங்கர் ராஜா, ராகினி ஸ்ரீ | 5:07 | |||||||
4. | "வெள்ளைக் கொடி" | எஸ். பி. பி. சரண் | 4:20 | |||||||
5. | "தேடி வருவேன்" | தோஷி சபரி | 5:44 | |||||||
6. | "எனக்காக உனக்காக" (பா. விஜய்) | நரேஷ் ஐயர், ஆண்ட்ரியா ஜெரெமையா | 4:34 | |||||||
மொத்த நீளம்: |
28:58 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)