காத்தரைன் "கேட்டி" கர்மானி (Catharine "Katy" D. Garmany) (பிறப்பு: மார்ச்சு 6, 1946) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தேசிய ஒளியியல் வான்காணகத்தில் பணிபுரிகிறார்.[1] இவர் வானியற்பியலில் இளம்அறிவியல் பட்டத்தை 1966 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்இவர் 1968 இல் வானியற்பியலில் முதுகலைப் பட்டத்தையும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்1971 இல் வானியற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] இவர் உயர்பொருண்மை விண்மீன்களினுருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றியும் வானியல் கல்வி பற்றியும் ஆய்வு மேற்கொள்கிறார்.[3]
இவர் 1998 இல் இருந்து 2001 வரை பசிபிக் வானியல் கழகத்தின் குழும உறுப்பினராக இருந்தார். பின்னர் 2001 இல் இருந்து 2003 வரை அதன் துணைத்தலைவராக இருந்துள்ளார்.[1] இவர் விண்மீன்களின் தோற்றம் பற்றிய ஆய்வுக்காக மிகவும் பாராட்டப்பட்டவர். இவர் 1976 இல் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருதை அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து பெற்றார். இவர் 1976 முதல் 1984 வரை ஜிலா நிறுவனத்தில் (வானியற்பியலாய்வக இளை நிறுவனத்தில்) ஆராய்ச்சி இணையுறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு முதல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வானியற்பியல், கோளியல், வளிமண்டலவியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.[3] இவர் ஜிலா நிறுவனத்தின் முந்தைய தலைவர். இவர் பட்ட, மேற்பட்டப் படிப்பு மாணவருக்கும் கல்வி பயிற்றுவிப்புப் பட்டறிவும் எளிய பொதுமக்களுக்குப் பரப்புரை ஆற்றுவதில் வல்லமையும் பெற்றவர். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம், கொலராடோ வளாகத்தில் அமைந்த சோம்மசு- பவுசுச் வான்காணகம், பிசுக்கே கோளரங்கம் ஆகிய நிறுவன்ங்கள் வாயிலாக பல பொதுமக்களுக்கான ப்ரப்புரைகளை ஆற்றியுள்ளார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியம், அமெரிக்க வானியல் கழகம், பசிபிக் வானியல் கழகம், பன்னாட்டுக் கோளரங்கக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார்.[3]