காத்தவராயன் | |
---|---|
இயக்கம் | சலங்கை துரை |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | கரண் விதிசா இராதா வடிவேலு |
வெளியீடு | மே 30, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காத்தவராயன் இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் 2008 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் கரண், விதிசா, வடிவேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஒகேனக்கல் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் கரன், அத்தொழிலை விட்டுவிட்டு பல போதை மருந்து கும்பலை காவல்துறையிடம் எப்படி பிடித்து கொடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
2008 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்ப வாங்கமுடியாமல் அனைவரிடமும் ஏமாறுகிறார். இத்திரைப்படத்தின் இசையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என சிபி விமர்சனம் செய்தது."[1][2]
இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | 'ஆசையே அலை போலே' | ஸ்ரீகாந்த் தேவா, மாலதி லெட்சுமணன்[3] |
2 | 'ஏ போங்குப்பா போங்குப்பா' | நவீன், சய்ந்தவி[4] |
3 | 'ஒரு காலை ஒரு மாலை' | கல்யாணி மேனன்[5] |
4 | 'ஒரு ஐக்கூ பார்வை' | திப்பு, சுசித்ரா[6] |
5 | 'காத்தவராயன் சாமி' | கரண், ராஜாமணியம்மாள்[7] |
6 | 'காத்தவராயா என்ன கடத்திட்டு' | அனுராதா ஸ்ரீராம்[8] |
இத்திரைப்படத்தில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் வடிவேலு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை வென்றார். இது இவர் வென்றுள்ள ஐந்தாவது தமிழக அரசின் விருதாகும்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)