காந்தா தியாகி (Kanta Tyagi) என்பவர் இந்தியச் சமூக சேவகர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகச் சமரசம் செய்யப்பட்ட கிராமப்புற பெண்களின் மேம்பாட்டினை மையமாகக் கொண்டு சேவையாற்றும் அரசு சார்பற்ற அமைப்பான, நிமரை தளமாகக் கொண்ட கசுதூரிபா வனவாசி கன்யா ஆசிரமத்தின் இயக்குநராக உள்ளார்.[1] இந்த அமைப்பின் கீழ், தையல் மற்றும் பின்னல் பள்ளி, மசாலா மற்றும் அப்பளம் உற்பத்தி பிரிவு மற்றும் பழங்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.[2] இவர் மத்தியப் பிரதேசத்தின் நிவாலியில் உள்ள கஸ்தூரிபா காந்தி நினைவு தேசிய அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி ஆவார்.[3] நர்மதா கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியான சர்தார் சரோவர் திட்டத்திற்கான மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு துணைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4] கிராமப்புற சமூகத்திற்கான இவரது சேவைகளுக்காக 1998ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[5] இந்திய வணிகர்கள் மகளிர் பிரிவின் ஜானகிதேவி பஜாஜ் விருதையும் (2002) இவர் பெற்றுள்ளார்.[1]