இது ருத்ர என்றழைக்கப்படும் 11வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மாரரஞ்சனி (25) ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம சுரம் முறையே மானவதி (05) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).