உருவாக்கம் | 1958 |
---|---|
நிறுவனர் | |
தலைமையகம் |
காந்தி அமைதி அறக்கட்டளை (Gandhi Peace Foundation) என்பது மகாத்மா காந்தியின் சிந்தனைகளை ஆய்வு செய்து மேம்படுத்தும் ஒரு இந்திய அமைப்பாகும்.[1]
காந்தியின் சிந்தனைகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் 1958 ஜூலை 31 அன்று இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.[2] காந்தி சமாரக் நிதியின் 10 மில்லியன் ரூபாய் நன்கொடையுடன் இது தொடங்கப்பட்டது.[3] இதன் முதல் குழு ரங்கநாத் ராமச்சந்திர திவாகர், இராசேந்திர பிரசாத் மற்றும் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட முக்கிய நபர்களைக் கொண்டிருந்தது.[4]
தற்போது குமார் பிரசாந்த் தலைவராக உள்ளார்.
காந்தி மார்கம் என்பது 1957 ஆம் ஆண்டில் எஸ். கே. ஜார்ஜ் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு இதழ் ஆகும்.[6] பின்னர் அவருக்கு பதிலாக ஜி. இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். 1965 வரை, இந்த இதழ் காந்தி சமாரக் நிதியைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதன் 10 வது ஆண்டு ஆண்டிலிருந்து, இது காந்தி அமைதி அறக்கட்டளை மூலம் நிதியுதவி செய்யப்பட்டது. 1973 முதல் 1979 வரை, இதழ் வெளியிடப்படவில்லை. பின்னர் மாதாந்திர வெளியீடாக மீண்டும் தொடங்கியது. 1989க்குப் பிறகு, காந்தி மார்கம் காலாண்டு இதழாக வெளியானது. 2005 முதல் ஜான் எஸ். மூலக்காட்டு இதழின் ஆசிரியராக உள்ளார்.
Gandhi Peace Foundation .
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)