நிறுவப்பட்டது | மார்ச்சு 25, 2012 |
---|---|
அமைவிடம் | ஜள்கான், மகாராஷ்டிரா |
ஆள்கூற்று | 20°56′40″N 75°33′19″E / 20.9444918°N 75.555363°E |
சேகரிப்பு அளவு | தோராயமாக 8 மில்லியன் பொருள்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | 1,17,810 (மார்ச் 2014இல்) |
பொது போக்குவரத்து அணுகல் | ஜள்கான், மகாராஷ்டிரா, இந்தியா |
வலைத்தளம் | Gandhi Research Foundation |
காந்தி தீர்த்தம் (Gandhi Teerth) என்பது காந்தி ஆய்வுக் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பெறுகின்ற, மகாத்மா காந்தி பற்றி அமைந்துள்ள ஓர் ஆய்வு நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜள்கான் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது காந்தி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அஜந்தா குகைகளிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது இது 25 மார்ச் 2012 ஆம் நாளன்று நிறுவப்பட்டது.
காந்தி ஆய்வு அறக்கட்டளை (ஜி.ஆர்.எஃப்), இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்களால் 25 மார்ச் 2012 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.[1] இது பவர்லால் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.[2]
இந்த அமைப்பானது ஜோத்பூர் கல்லைக் கொண்டு நிலையான மற்றும் அறிவியல்ரீதியாக கட்டப்பட்டது, பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் வகையில் அமைந்த விதிமுறைகளின் கீழ்.கட்டப்பட்டது. இங்கு ஆடிட்டோரியம், ஒரு ஆம்பிதியேட்டர், கூட்டம் / வகுப்பறைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் ஆகியவை உள்ளன.
காந்தியைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்களுக்காக பாதுகாக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களைக் கொண்ட நூலகம் மற்றும் காப்பகங்கள் சிறப்பாக நடத்தப்பெற்று வருகின்றன. இங்கு , கையால் தயாரிக்கப்பட்ட காதி ஆடை, பரிசு பொருட்கள் மற்றும் காந்திய இலக்கியம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கடை இயங்கி வருகிறது.
காந்தி அருங்காட்சியக கட்டிடத்தில் 30 ஊடாடும் பிரிவுகள் உள்ளன, இதில் மகாத்மா காந்தியைப் பற்றி விவரிக்கும் ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், தொடு திரைகள், பயோ-ஸ்கோப் போன்றவை உள்ளன. இது மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து பல மொழி ஆடியோ வழிகாட்டப்பட்ட, குளிரூட்டப்பட்ட அருங்காட்சியகத்தைக் கொண்டு அமைந்துள்ளது. உரிய வழிகாட்டியின் துணையோடு இந்த அருங்காட்சியகத்தை தோராயமாக 2 மணி நேரம் 30 நிமிடங்களில் சுற்றிப் பார்த்து வரலாம்.
இங்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பிற அமைப்புகள் உள்ளன.[3]
இது காந்தியைப் பற்றிய பல்துறை கொண்ட, தற்காலிக கலைப் பாணியில் அமைந்த காந்தியின் கொள்கைகள், வாழ்க்கைப்பாடங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய அருங்காட்சியகம் ஆகும்.
காந்தி சர்வதேச ஆய்வு நிறுவனம் காந்தி தீர்த்தத்தின் கல்விப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. இது பட்டயம், பட்டப்பபடிப்பு போன்றவற்றை வழங்கிவருகிறது. மேலும் காந்திய ஆய்வுகள் தொடர்பாக பல நிலைகளில் ஆய்வினை மேற்கொள்ளவும் உதவி புரிகிறது.
இங்கு இயங்கி வருகின்ற காந்திய சிந்தனை அமைப்பில் தற்காலிகப் பிரச்னைகளைக் குறித்து இங்குள்ள ஆய்வாளர்கள் விவாதிப்பார்கள். அமைதி மற்றும் அகிம்சை தொடர்பான கொள்கை முடிவுகள் பற்றி இந்த அமைப்பில் உள்ளோர் ஆய்வு செய்து கருத்து தெரிவிப்பர்
காந்தியானா என்னும் பிரிவில் காந்தியைப் பற்றிய தொகுப்புகள், பிரிப்புகள், வகைப்படுத்தல், காந்தியைப் பற்றி நூல்கள் வெளியிடல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காந்தி ஆவணக்காப்பகத்தில் காந்தி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
காந்திநாமிக்ஸ் எனப்படுகின்ற காந்தியியல் பிரிவில் காந்தியக் கொள்கைகள் அடிப்படையில் அமைந்த கிராமப்புற மேம்பாடு தொடர்பான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
காந்தி ஆய்வு அறக்கட்டளையானது நம்பகத்தன்மைவாய்ந்த ஆதாரங்களைத் தொகுத்து 7140 நூல்கள், 4368 பருவ இதழ்கள் (ஹரிஜன், நவஜீவன், யங் இந்தியா போன்றவை), 4019 உரிய குறிப்புகளைக் கொண்ட புகைப்படங்கள், 75 திரைப்படங்கள், 150 காந்தியின் ஆடியோ பதிவுகள் மற்றும் 114 ஸ்டாம்ப்புகளைக் கொண்டுள்ளது.
கிரிஹா ஆதர்ஷ் விருது (2014) [4] மற்றும் 2013 - 14ஆம் ஆண்டில் கலைஞர்களுக்கான ஆசியா ஃபெஸ்ட் கான்கிரீட் விருது இல் [5] ஆகிய விருதுகளை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |2=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)