ச
காந்திலால் பூரியா Kantilal Bhuria | |
---|---|
மத்தியப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | குமன் சிங் தாமோர் |
தொகுதி | இயபுவா சட்டமன்ற தொகுதி |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 24 நவம்பர் 2015 – 23 மே 2019 | |
முன்னையவர் | திலீப் சிங் பூரியா |
பின்னவர் | குமன் சிங் தாமோர் |
தொகுதி | இரத்லம் மக்களவைத் தொகுதி |
பதவியில் 1998–2014 | |
முன்னையவர் | திலீப் சிங் பூரியா |
பின்னவர் | திலீப் சிங் பூரியா |
தொகுதி | இரத்லம் மக்களவைத் தொகுதி |
மாநில அமைச்சர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) | |
பதவியில் 24 மே 2004 – 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை, பழங்குடியினர் தொடர்பான அமைச்சகம் (இந்தியா) | |
பதவியில் 31 மே 2009 – 19 சூலை 2011 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1950 இயபுவா, மத்திய பாரதம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கல்பனா பூரியா |
பிள்ளைகள் | 2 மகன்கள் சந்தீப் பூரியா விக்ராந்து புரியா |
பெற்றோர் |
|
வாழிடம் | இயபுவா |
கல்வி | முதுகலை, இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | சந்திரசேகர் ஆசாத் கல்லூரி, இயபுவா |
தொழில் | அரசியல்வாதி |
As of 29 மே, 2018 மூலம்: [1] |
காந்திலால் பூரியா (Kantilal Bhuria) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் ஜூலை 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை இந்திய குடியரசின் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கத்தில் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.[1] முன்னதாக, இவர் வேளாண் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் இருந்தார்.[2] இவருக்குப் பிறகு, மற்றொரு காங்கிரசுகாரர் வி கிசோர் சந்திர தியோ புதிய பழங்குடியினர் விவகார அமைச்சர் பொறுப்பு வகித்தார்.
பூரியா 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இயபுவா தொகுதியிலிருந்தும், 2009 ஆம் ஆண்டில் இரத்லம் தொகுதியிலிருந்தும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்லம் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்தார், ஆனால் 2019 ஆம் ஆண்டு இயபுவா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியப் பிரதேச சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]