![]() |
கானாவில் இந்து சமயம் (Hinduism in Ghanawas), 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான் நாட்டில் இந்து சமயத்தைப் பின்பற்றும் சிந்தி மக்களால் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் இந்து சமயம் அறிமுகமானது.[1]கானாவின் தலைநகரான அக்ராவில் கருப்பினத்தவரான சுவாமி ஞானாநந்தா சரஸ்வதி நிறுவிய இந்து மடாலயத்தால் இந்து சமயம் பரவக் காரணமாயிற்று.[2] இஸ்கான் நிறுவனம் கானாவின் அக்ரா நகரத்தில் இராதா கிருஷ்ணன் கோயில் நிறுவி, கானா மக்களில் பலரை கிருஷ்ண பக்தர்களாக மாற்றியுள்ளது. இந்து சமயம், கானாவில் வளர்ந்து வரும் சமயமாக உள்ளது.
2021ஆம் ஆண்டின் கானா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமயத்தைப் பின்பற்றும் சிந்தி மக்கள் உட்பட, 30,000 இந்து சமயத்தவர்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க இந்து மடாலயத்தை பின்பற்றுபவர்கள் சைவர்களாகவும்; இஸ்கானை பின்பற்றுபவர்கள் வைணவர்களாகவும் உள்ளனர்.