கான்-இ-ஆசம் கான் சகான் அலி | |
---|---|
கான் சகான் அலியின் கல்லறை | |
சுய தரவுகள் | |
இறப்பு | சுமார் 25 அக்டோபர் 1459 கி.பி. |
நினைவிடம் | கான் சகான் அலியின் கல்லறை, பேகர்காட், வங்காளதேசம் |
சமயம் | இசுலாம் |
வேறு பெயர்(கள்) | கஞ்சாலி, கவாஜா அலி |
பதவிகள் | |
பதவிக்காலம் | 15ஆம் நூற்றாண்டு |
Disciples
|
உலக் கான் சகான் அலி (Ulugh Khan Jahan Ali) ஓர் முஸ்லிம் துறவியாவார். கலிபதாபாத்திலுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமான பேகர்காட்டின் பெரிய மசூதி நகரத்தை இவர் கட்டியதாக நம்பப்படுகிறது.
துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த இவர் "உலுக் கான்" என்ற பெயரிலும் அறியப்படுகிறார். ஆரம்பத்தில் துக்ளக் சுல்தானகத்தின் கீழ் ஒரு பிரபுவாக இருந்த கான் சகான் 1398 இல் தைமூர் தலைமையில் வந்த தைமுரியப் படைகள் தில்லியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து வங்காளத்திற்கு குடிபெயர்ந்ததாகத் தெரிகிறது
வங்காளத்திற்கு குடிபெயர்ந்த பிறகு, கான் மற்றும் அவரது தோழர்கள் 12 முஸ்லிம் துறவிகளால் சம்பாநகருக்கு வரவேற்கப்பட்டனர் (இது 12 புனிதர்களின் பெயரால் பரோபசார் என மறுபெயரிடப்பட்டது). கான் பல ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார்.[1]
வங்காளத்தின் சுல்தான் மக்மூத் சாவிடமிருந்து சாகிராக சுந்தரவனக் காடுகளை கான் வாங்க முடிந்தது. வங்காள சுல்தானகத்தின் கீழ் அதிகாரியாகவும் உள்ளூர் ஆட்சியாளராகவும் இருந்ததைக் காட்டி இவருக்கு கான்-இ-ஆசம் என்ற அதிகாரப்பூர்வ பட்டம் வழங்கப்பட்டது. கான் தனது இரண்டு பிரதிநிதிகளான புர்கான் புரா கான் மற்றும் அவரது மகன் பதே கான் ஆகியோருடன் சேர்ந்து ஏராளமான அடர்ந்த காடுகளை அகற்றி, மக்கள் குடியிருப்பதற்கும் மற்றும் நெல் சாகுபடிக்காகவும் நிலங்களைச் செப்பனிட்டார். இவரும் இவரது குழுவும் உப்புநீரை வெளியேற்றுவதற்காக நீரோடைகள், தண்ணீரை சேமிப்பதற்காக நூற்றுக்கணக்கான குளங்கள் போன்றவற்றைத் தோண்டினர். இவர் ஆட்சி செய்த இந்தப் பகுதி கலிபதாபாத் என்று அழைக்கப்பட்டு, வடக்கே லோககராவில் உள்ள நால்டி வரை பரவியது. சிங்கார், பீபி பெகேனி, சுனாகோலா, ரனாபிஜோய்பூர், ஒன்பது தூண் பள்ளிவாசல், ஜிந்தா பீர் மற்றும் ரேசா குடா மற்றும் கோரா திகி ப்பகுதியில் கட்டினார். மிக முக்கியமாக, இவர் அறுபது தூண் பள்ளிவாசலைக் கட்டினார். இது அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஒன்றாகும். [2]
இவர் வணிகர்களுக்காக ஏராளமான தங்குமிடங்களை நிறுவினார். மேலும், நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் மற்றும் மதராசாக்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார். குறிப்பாக பள்ளிவாசல்களைக் கட்டும் போது, அதன் அருகில் அதிக எண்ணிக்கையில் பெரிய அளவிலான குளங்களைத் தோண்டினார். அறுபது தூண் பள்ளிவாசலின் மேற்கில் கி.பி.1450 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்ட கஞ்சலி குளம் மற்றும் இவரது கல்லறைக்கு அருகில் அமைந்துள்ள கோரா குளம் ( 230 x 460 மீட்டர்) (750 x 1,500 அடி) மிகவும் குறிப்பிடத்தக்க குளங்கள் ஆகும். இவர் பேகர்காட்டிலிருந்து சிட்டகொங்கிற்கு 32-கிலோமீட்டர் (20 mi) நெடுஞ்சாலையை அமைத்ததாக கூறப்படுகிறது.
கான் 25 அக்டோபர் 1459 அன்று இறந்தார் (27 துல் ஹிஜ்ஜா 863 ஏ எச்). இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது உடல் ஒரு பள்ளிவாசல் அருகே அமைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது பெயரால அழைக்கப்படும் கான் ஜகான் அலியின் ஏரியில் முதலைகள் உள்ளன. அவை கான் வளர்த்த இரண்டு முதலைகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. [3] இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவதுடன், அங்கு வசிக்கும் முதலைகளை செல்லமாக வளர்க்கின்றனர். [4]
கான் சகான் தான் கட்டிய கட்டிடங்களில் ஒரு புதிய கட்டிடக்கலை பாணியை அறிமுகப்படுத்தினார். அதற்கு அவரது பெயரிடப்பட்டது. கான் சகான் பாணி கட்டிடக்கலை நவீன கால குல்னா பிரிவு முழுவதும் காணப்படுகிறது. மொங்லாவில் உள்ள கான் சகான் அலி விமான நிலையத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. [5]