1884 தஞ்சாவூர், சென்னை மாகாணம் (தற்போது தமிழ்நாடு)
இறப்பு
1 பிப்ரவரி 1960
படித்த கல்வி நிறுவனங்கள்
மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி
பணி
வழக்கறிஞர்
அறியப்படுவது
சென்னை மாகாண ஆளுநர், நீதிகட்சி தலைவர்
கான் பகதூர் சர் முஹம்மது உஸ்மான் (Mohammad Usman of Madras ) (1884 – 1 ஜனவரி 1960) ஓர் இந்திய அரசியல்வாதி. பொபிலி அரசர் முதல்வராக இருந்தபோது இவர் சென்னை மாகாணத்திற்கு ஆளுனராக இருந்தார்.[1]
உஸ்மான் 1920 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்றத்தில்நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[7] 1920 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். பிறகு 1924 ஆம் ஆண்டு முதல் - 1925 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் தலைவராக செயல்பட்டார்.[8] 1921 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலைமைச்சர் பனகல் அரசர் உள்நாட்டு மருத்துவ பற்றிய ஆய்வு குழுவை உருவாக்கினார்.[6][9] அந்த குழுவுக்கு உஸ்மான் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[6][10]
1922 ஆம் ஆண்டு இந்த குழு ஆயுர்வேத மருத்துவம் அறிவியலை அடிப்படையாக கொண்டது என்றும், ஆனால் அந்த மருத்துவம் மக்களிடையே பயன்பாட்டின் ஆர்வம் குறைத்து வருவதாக முதலமைச்சர் பனகல் அரசரிடம் அறிக்கை சமர்பித்தது.[11] உஸ்மான் 1930 ஆம் ஆண்டு தென்னிந்திய முஹம்மதன் கல்வி குழுமத்தின் தலைவராக நியமிக்கபட்டார்.[12]
1930 ஆம் ஆண்டு பொபிலி அரசர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவரின் அமைச்சரவையில் உஸ்மானுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த அமைச்சர் பதவியை உஸ்மான் 1934 ஆம் ஆண்டு இராஜினாமா செய்துவிட்டு ஏ.டி.பன்னீர்செல்வம் என்பவரை நியமித்தார்.[13] அப்போது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாகியது.[14]
உஸ்மான் தன்னுடைய பதவிக்கு மற்றொரு முஸ்லிமை பரிந்துரைக்காமல் கிருத்துவத்தை சேர்ந்தவரை பரிந்துரைத்தது தான் முஸ்லிம்களின் அதிருப்திக்கு காரணம். இதனால் வகுப்புவாத மோதல்கள் சில இடங்களில் நடந்தன.[15]
1935 ஆம் ஆண்டு உஸ்மான் ரோடரி சங்கத்தின் முதல் இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[16]
1934 ஆம் ஆண்டு மே 16 முதல் 11934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார்.[17] இவர் சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக தேர்வு செய்யபட்ட முதல் இந்தியர் ஆவார்.[17]
1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று உஸ்மான் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு 76 வயது.[18] இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரின் முக்கிய சாலைக்கு உஸ்மான் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.