கான்சு - யூர்கன் திரெடர் (Hans - Jürgen Treder) (பிறப்பு: செப்டம்பர் 4,1928 பெர்லினில்), (இறப்பு: நவம்பர் 18,2006 போட்சுடாமில்) ஒரு செருமானியக் கோட்பாட்டு இயற்பியலாளரும் பொது சார்பியலில் குறிப்பாக, அதன் விரிவாக்கங்களான வானியற்பியல், அண்டவியல் ஆகியவற்றில் ஆழ்புலமை பெற்றவரும் ஆவார். அறிவியலின் வரலாற்றிலும் மெய்யியல் வரலாற்றிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது.
தொடக்கத்தில் இவர் இயற்பியலில் ஆர்வம் கொண்டிருந்தார் - இந்தப் பாடத்தில் திறமையைக் காட்டினார். 1944 இல் ஒரு மாணவராக இருந்தபோது , பெர்லினில் உள்ள வெர்னர் ஐசன்பெர்க்கைச் சந்தித்து பின்னர் கடிதத் தொடர்பும் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெர்லின் அம்போல்ட்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் மெய்யியலும் படித்தார்.
1956 ஆம் ஆண்டில் பெர்லின் அம்போல்ட்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1957 இல் பெர்லின் செருமானிய அறிவியல் கல்விக்கழகத்தின் கணித ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக ஆனார். 1962 இல் வாழ்வாதாரம் பெற்ற உடனேயே 1963 இல் பெர்லின் அம்போல்ட்டு பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியராகவும் , தூய கணித கல்விக்கழக நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனார். அந்த நேரத்தில் ஈர்ப்பு கதிர்வீச்சு குறித்த பணியின் வழி அவர் பன்னாட்டு ஏற்பைப் பெற்றார். 1965 ஆம் ஆண்டில் ஐன்சுட்டைனின் களச் சமன்பாடுகளின் வெளியீட்டின் 50 வது ஆண்டு விழாவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்வதில் அவர் முதன்மைப் பங்கு வகித்தார்.[1]
1966 இல் செருமானிய அறிவியல் கல்விக்கழகத்தின் முழு உறுப்பினரான இவர் , பெர்லின் - பாபல்சுபெர்கு அறிவியல் கல்விக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தின் இயக்குநராகவும் இருந்தார். 1969 இல் மறுசீரமைப்பைத் தொடர்ந்து , புதிதாக நிறுவப்பட்ட வானியற்பியலுக்கான மைய நிறுவனத்திற்குத் (ZIAP) தலைமை தாங்கினார் , இதில் போட்சுடாமில் முன்பு தன்னியக்கமான ஆய்வகங்க ளான பாபல்சுபெர்கு ஆய்வகம்,சோனெபெர்க் ஆய்வகம், கார்ல் சுவார்சுசைல்டு ஆய்வகம் - டவுட்டன்பர்கு ஆகியவை இணைக்கப்பட்டன. 1973 வரை இவர் அறிவியல் கல்விக்கழகத்தில் அண்ட இயற்பியல் ஆராய்ச்சித் துறையையும் வழிநடத்தினார்.[2] பின்னர் அவர் உடல்நலக் காரணங்களைக் கூறி ZIAP இன் நிர்வாகத்தில் கவனம் செலுத்தினார். அவர் இதை கோட்பாட்டு ஈர்ப்பு இயற்பியலின் மையமாக மாற்றியது மட்டுமல்லாமல் , காந்தப் பாய்ம இயங்கியலையும் மேக்சு சுட்டீன்பெக்குடன் இணைந்து சேர்த்தார். இது படிமப் பயிற்சியில் ஈர்ப்பு கோட்பாட்டிற்கு இணையாக வானியற்பியலில் முதன்மைப் பங்கு வகித்தது. மேலும் புவி இயற்பியல் துறை ( கான்சு எர்டெலுடன் இணைந்து) பின்னர் போட்சுடாமில் இவரால் உருவாக்கப்பட்டது.
ஆல்பர்ட் ஐன்சுட்டைனின் 100 வது பிறந்தநாளில் - 1979 இல் , ஓட்டோ நாதன், ஐன்சுட்டைன் தோட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கல்விக்கழகத்தின் விருந்தினராக கபூத் பிராண்டன்பேர்க்கில் ஒரு ஐன்சுட்டைன் கோடை இல்லத்தை பெறமுடிந்தது. 1982 ஆம் ஆண்டில் அவர் ZIAP அமைப்பை தனது வ்ழித்தோன்றலான கார்ல் - கெய்ன்சு சிமித் என்பவரிடம் ஒப்படைத்தார். திரெடர் போட்சுடாம் கபுத்தில் உள்ள ஐன்சுட்டைன் கல்விக்கழக ஆய்வகத்தின் இயக்குநராகவும் நிறுவனராகவும் 1992 வரை இருந்தார். இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் தனது நண்பர் புவி இயற்பியலாளர் வில்பிரைட் சுரோடருடன் இணைந்து புவி இயற்பியல், விண்வெளி இயற்பியலில் சூரிய வேறுபாட்டுத் தன்மை உட்பட பல படைப்புகளையும் கூடுதலாக , ஐன்சுட்டைனும் புவி இயற்பியலும் புத்தகத்தின் பதிப்பையும் , கான்சு எர்ட்டெலின் படைப்புகளின் சில தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். சூரிய மினிமாவும் ( சுப்போரர் மவுந்தர் டால்ட்டன் மினிமா) சூரிய செயல்பாட்டின் புறநிலை விளைவுகளும் அவர்களின் பணியின் மையமாக இருந்தன. திரெடர் " புவி இயற்பியல், அண்ட இயற்பியல் வரலாறு " சார்ந்த பன்னாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தார்.
திரெடர் செருமானிய சனநாயகக் குடியரசில் நற்பெயரைப் பெற்றார் (அவர் பெற்றவற்றில் அந்நாட்டுத் தேசிய பரிசும் அரசியல் தலைமையின் முழு நம்பிக்கையும் அடங்கும்) மேலும் அவர் பயணம் செய்வதற்கான முழு தர்சார்புடன், ஓட்டுநரால் இயக்கப்படும் சீருந்து போன்ற சலுகைகளையும் பெர்றார். மேற்கத்திய நாடுகளிடமிருந்து வந்த அழைப்புகளைத் திரெடர் ஏர்க மறுத்தார். அவர் ஒரு உறுதியான மார்க்சியவாதி மட்டுமல்ல , பெர்லினில் உள்ள அறிவியலின் வரலாற்றோடு தான் நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் உணர்ந்தார் இந்தப் பொருண்மையைப் பற்றி பின்னர் சில புத்தகங்களை எழுதினார்.
பின்னர் பாபல்சுபெர்க் நோக்கீட்டகத்தைச் சார்ந்து வாழ்ந்த இவர் , பெருங்குழப்பவாதியாக இருந்தார். மேலும் அவர் 1980 களின் முற்பகுதியில் ஓய்வு பெற்ற அறிவியல் அமைப்பிலும்கூட தன் முன்னணி பங்கைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. பிறகு இவர் அறிவியல் வரலாறு, அறிவியலின் மெய்யியலுக்கு மாறினார் (அவர் கார்ல் பாப்பருடன்னிணைந்து இத்தலைப்பு சார்ந்த கடிதப் பரிமாற்றத்திற்குத் தலைமை தாங்கினார்).[3]
திரெடர் இலீப்னிசு - சோசியலிசக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
இவர் ஒரு உயர் அறிவியல் ஆக்கத்திறனை வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட 500 தனிப்பட்ட பங்களிப்புகளையும் 20 க்கும் மேற்பட்ட தனிவரைவுகளையும் வெளியிட்டார்.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link){{cite book}}
: CS1 maint: location missing publisher (link){{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)திரெடரின் சில பரவலான எழுத்துக்கள்:
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)