காபில் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 8°46′49″N 76°40′35″E / 8.78028°N 76.67639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
அரசு | |
• நிர்வாகம் | Edava Panchayat |
பரப்பளவு | |
• மொத்தம் | 3 km2 (1 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695311[1] |
தொலைபேசி குறியீடு | 0470 |
வாகனப் பதிவு | KL 80 |
அருகில் உள்ள நகரம் | வர்க்கலை |
சட்டமன்றத் தொகுதி | வர்க்கலை |
காப்பில் (Kappil, Thiruvananthapuram) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இது அரபிக் கடலோரத்தில், வர்கலா வட்டத்தின் எடவா பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இது வர்கலா நகர மையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. காபிலுக்கு அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் வர்க்கலா தொடருந்து நிலையம் ஆகும். [2]
காப்பில் ஊரானது வர்க்கலை - பரவூர் - கொல்லம் சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. வர்கலா தொடருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள வர்கலா நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து ஆற்றிங்கல், திருவனந்தபுரம், கொல்லம் போன்ற நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளன. கேரளப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் காப்பில் கிராமத்துக்கு அருகில் உள்ள நகரங்களான வர்கலா, திருவனந்தபுரம், கொல்லம், பராவூர் போன்றவற்றிற்கு பேருந்து சேவை அளிக்கின்றன.
காப்பிலிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வர்கலா தொடருந்து நிலையமானது தொடருந்துகளால் திருவனந்தபுரம், தில்லி, சென்னை, கோவா, ஐதராபாத், கொல்லம், கொச்சி, மும்பை, கொல்கத்தா, கன்னியாகுமரி, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
காப்பில் தொடருந்து நிலையம் இந்த கிராமத்தில் உள்ளது. இதிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, புனலூர் போன்றவற்ற நகரங்களுக்கு பயணிகள் தொடருந்துகள் செல்கின்றன.
காப்பிலில் இருந்து 4. கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாயத்தில் உள்ள எடவாய் தொடருந்து நிலையத்திலிருந்து, திருவனந்தபுரம், கொல்லம், நாகர்கோயில் போன்றவற்றிற்கு பயணிகள் தொடருந்துகள் சென்றுவருகின்றன.
காப்பிலிலிருந்து 48 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
இங்கு அழகிய உப்பங்கழியும், கடலும் சந்தித்துக் கொள்கின்றன. காட்சி சிறப்பும், தனிமையும் ஆளுமை செய்யும் இடமாக இது உள்ளது. அருகில் உள்ள நெல்லட்டில், எடவா,, பரவூர், நடயரா, வர்க்கலை முதலியன பகுதிகள் காணத்தக்கவை. காப்பில் பகவதி கோயிலுக்கும், பண்டிகை காலங்களில் ஒரு சுற்றுலா இடத்திற்கும் கபில் பிரபலமானது.