காப்பார் (P109) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Kapar (P109) Federal Constituency in Selangor | |
சிலாங்கூர் மாநிலத்தில் காப்பார் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம்; சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | காப்பார் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கிள்ளான் மாவட்டம்; பெட்டாலிங் மாவட்டம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | அலிமா அலி (Halimah Ali) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 189,369 |
தொகுதி பரப்பளவு | 362 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
காப்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kapar; ஆங்கிலம்: Kapar Federal Constituency; சீனம்: 卡帕联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டம் (Klang District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P109) (Dewan Rakyat) ஆகும்.[1]
காப்பார் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), காப்பார் தொகுதி 44 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]
இந்த காப்பார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர்;
ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடையே மறுபகிர்வு செய்யப்பட்டது. 1984-ஆம் ஆண்டில் கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் துறைமுகம் பகுதிகளில் இருந்து மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.[3]
காப்பார் நகரம், (ஆங்கிலம்: Kapar Town) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். காப்பார் நகரம் மலாக்கா நீரிணையில் காப்பார் ஆறு (Kapar River) சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.
இந்த நகரத்தின் மேற்கில், பெரிய அளவிலான சதுப்பு நிலம் உள்ளது. ஆனால் கடலை ஒட்டிய சில பகுதிகளில் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.[4]
காப்பார் நகரம் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களைக் கொண்ட ஒரு பகுதி. மலாய் மக்களில் பலர் ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நகரப் பகுதி சீனர்களால் நடத்தப்படும் கடைகளினால் நிரம்பியுள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் புறநகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். காப்பார் பகுதியில் நிறைய செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்த போது தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள்.
கிள்ளான் மாவட்டத்தில் இரு முக்கிம்கள் உள்ளன. அவை:
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சிலாங்கூர் பாராட் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது | |||
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1959–1963 | அம்சா அலாங் (Hamzah Alang) |
தேசிய முன்னணி (அம்னோ) |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1963–1964 | அம்சா அலாங் (Hamzah Alang) |
தேசிய முன்னணி (அம்னோ) |
2-ஆவது | 1964–1969 | ||
1969–1971 | நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | ||
3-ஆவது | 1971 | அம்சா அலாங் (Hamzah Alang) |
தேசிய முன்னணி (அம்னோ) |
1971–1973 | முகமட் தாகிர் அப்துல் மனான் (Mohd Tahir Abdul Manan) | ||
1973–1974 | தேசிய முன்னணி (அம்னோ) | ||
தொகுதி நீக்கப்பட்டது; கோலா சிலாங்கூர் தொகுதி; கிள்ளான் துறைமுகத் தொகுதிகளுக்குள் இணைக்கப்பட்டது. | |||
தொகுதி மீண்டும் கோலா சிலாங்கூர் தொகுதி; கிள்ளான் துறைமுகத் தொகுதிகளுக்குள் இணைக்கப்பட்டது. | |||
7-ஆவது | 1986–1990 | டி.பி. விசேந்திரன் (D. P. Vijandran) |
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) |
8-ஆவது | 1990–1995 | எம். மகாலிங்கம் (M. Mahalingam) | |
9-ஆவது | 1995–1999 | லீலாவதி கோவிந்தசாமி (Leelavathi Govindasamy) | |
10-ஆவது | 1999–2004 | கோமலா தேவி பெருமாள் (Komala Devi Perumal) | |
11-ஆவது | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2013 | மாணிக்கவாசகம் சுந்தரம் (Manikavasagam Sundaram) |
மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்) |
13-ஆவது | 2013–2018 | மணிவண்ணன் கோவிந்தசாமி (Manivannan Gowindasamy) | |
14-ஆவது | 2018–2022 | அப்துல்லா சானி அப்துல் அமீத் (Abdullah Sani Abdul Hamid) |
மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்) |
15-ஆவது | 2022 – தற்போது | அலிமா அலி (Halimah Ali) |
பெரிக்காத்தான் (PAS) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 189,369 | - |
வாக்களித்தவர்கள் | 159,700 | 83.45% |
செல்லுபடி வாக்குகள் | 158,030 | 100.00% |
செல்லாத வாக்குகள் | 1670 | - |
பெரும்பான்மை | 11,782 | - |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) |
---|---|---|---|---|
அலிமா அலி (Halimah Ali) |
பெரிக்காத்தான் | 65,751 | 41.61% | |
அப்துல்லா சானி அப்துல் அமீட் (Abdullah Sani Abdul Hamid) |
பாக்காத்தான் | 53,969 | 34.15% | |
முகமட் நூர் அசுமான் (Muhammad Noor Azman) |
பாரிசான் | 35,079 | 22.20% | |
தாரோயா அல்வி (Daroyah Alwi) |
மலேசிய தேசிய கட்சி | 3,016 | 1.84% | |
முகமது பதான் உசின் (Mohd Pathan Hussin) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,015 | 0.64% | |
வி.பி. சேவலிங்கம் (VP Sevelinggam) |
சுயேச்சை | 477 | 0.30% | |
ரகீம் அவாங் (Rahim Awang) |
வாரிசான் | 265 | 0.17% |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)