காமாரெட்டி மாவட்டம்
కామారెడ్డి జిల్లా کاماریڈی ضلع | |
---|---|
மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்கானா |
பிரதேசம் | தக்கான பீடபூமி |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | காமாரெட்டி |
அரசு | |
• நிர்வாகம் | மாவட்ட ஆட்சியரகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,652.00 km2 (1,410.05 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 15 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 9,72,625 |
• தரவரிசை | 15 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–17[2] |
இணையதளம் | = kamareddy |
காமாரெட்டி மாவட்டம் (Kamareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]தெலங்கானா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிசாமாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் காமாரெட்டி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காமாரெட்டி நகரம் ஆகும். காமாரெட்டி நகரத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது.
3,652 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1] காமாரெட்டி மாவட்டத்தின் வடக்கில் நிசாமாபாத் மாவட்டம், கிழக்கில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், தென்கிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் மேடக் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரத்தின் நாந்தேட் மாவட்டம், தென்மேற்கில் கர்நாடகாவின் பீதர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காமாரெட்டி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,72,625 ஆகும்.[1][5] இம்மாவட்ட மக்கள் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.
காமாரெட்டி மாவட்டம், காமரெட்டி, பன்ஸ்வாடா மற்றும் எல்லரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1][6][7] இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் என். சத்தியநாராயனா ஆவார்.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)