காம்போஜ பால வம்சம் (Kamboja-Pala dynasty) வங்காளப் பகுதிகளை 10 முதல் 11-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டது.
11ஆம் நூற்றாண்டின் இறுதியில் காம்போஜ பால வம்சத்தின் இறுதி மன்னரான தர்மபாலனை, முதலாம் முதலாம் இராசேந்திர சோழன் போரில் வீழ்த்தினார். [1][2][3]
இறுதியில் பாலப் பேரரசர் இரண்டாம் கோபாலன், காம்போஜ பால வம்சத்தை வீழ்த்தி வங்காளத்தில் பால வம்சத்தை நிறுவினார்.
பத்தாம் நூற்றாண்டில் மீரட் பகுதியின் காம்போஜர்களின் ஒரு கிளையினர் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளபாலப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றினர்.[6][7]
பின்னர் காம்போஜ பால வம்சத்தவர்கள் வங்காளம் மற்றும் பிகாரின் பகுதிகளை முழுவதுமாகக் கைப்பற்றினர்.[8]தினஜ்பூர் கல்வெட்டுகளிலின் மூலம் இக்காம்போஜ இனத்தவர்களை கௌடபதிகள் என அழைக்கப்பட்டதாக குறித்துள்ளது. இதற்கு கௌட நாட்டின் தலைவர்கள் எனப் பொருளாகும். [9][10]
காம்போஜ பாலர்கள் குறித்தான செய்திகள் குறித்த 1931-ஆம் ஆண்டில் இர்தா தாமிரப் பட்டயங்கள் மூலம் கிடைத்துள்ளது. [11]சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட இத்தாமிரப் பட்டயங்களில், 49 வரிச் சொற்கள் பழைய வங்காள மொழி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இத்தாமிரப் பட்டயத்தில் காம்போஜ பாலப் பேரரசர்களை காம்போஜ வம்ச திலகங்கள் எனக் குறித்துள்ளது.
காம்போஜ பாலப் பேரரசர்கள் வங்காளத்தை பத்து முதல் பதினோறாம் ஆண்டு முடிய ஆண்டனர் என இர்தா தாமிரப் பட்டயங்கள் கூறுகிறது.[12]
காம்போஜ பால வம்ச மன்னர்களில் மூன்றாவதாக ஆட்சி செய்த முதலாம் மகிபாலன் முழு வங்காளத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் என இர்தா தாமிரப் பட்டயங்கள் கூறுகிறது. [13].[14]
வங்காள காம்போஜ பால வம்ச மன்னர்களில் நயாபால போன்ற மன்னர்கள் சிவபெருமானை வழிபட்டனர். காம்பாஜ பால வம்ச மன்னர் நாராயண பாலன் விஷ்ணுவின் பக்தர் ஆவார். ராஜ்ஜிய பாலன் போன்ற காம்போஜ பால வம்ச மன்னர்கள் புத்தரையும், போதிசத்துவர்களையும் வழிபட்டனர்.
↑Ancient Kamboja, people and the Country, 1981, pp 296-309, 310, Dr J. L. Kamboj; The Kambojas Through the Ages, 2005, pp 158-162, 168-69, S Kirpal Singh
↑cf: "Along with Sakas, numerous tribes of Kambojas had crossed Hindukush and spread into whole of north India especially into Punjab and Uttar Pradesh etc. Mahabharata (12.102.5) specifically attests that Kambojas and Yavanas conquered Mathura country. The Kambojas also find mention in the Mathura Lion Capitol Inscriptions issued by Saka Mahakshatrapa Rajuvala" (India And The world 1964 p 154 by Dr Buddha Parkash).
↑Ancient Kamboja, People and the Country, 1981, p 311, Dr J. L. Kamboj
↑RC Majumdar, History of Bengal, Dacca, 1943, pp 133-134
↑Ancient Kamboja, People and the Country, 1981, p 315, Dr J. L Kamboj; Ancient India, 1956, p 382-83, Dr R. K. Mukerjee, The Kambojas Through the Ages, 2005, p 208-210, S Kirpal Singh