காரென் மாசுதெர்சு Karen Masters | |
---|---|
பிறப்பு | 1979 |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
அமைப்பு(கள்) | ஏவர்போர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வானியற்பியல் , பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் விலங்குக் காட்சி |
காரென் மாசுதெர்சு (Karen Masters) (பிறப்பு: 1979) ஒரு வானியற்பியல் இணைப் பேராசிரியர் ஆவார். இவர் பால்வெளி உருவாக்கத்தில் ஆர்வம் உள்ளவர். இவர் பென்சில்வேனியா, ஏவர்போர்டு கல்லூரியில் பணிபுரிகிறார். இவர் பால்வெளி விலங்குக் காட்ட்சி எனும் மக்கள் அறிவியல் திட்ட்த்தில் திட்ட அறிவியலாளராக உள்ளார். இவர் பால்வெளிப் படமலர்ச்சி ஆய்வில் வகைபாட்டியல் முறையைப் பின்பற்றுகிறார்.
காரென் மாசுதெர்சு பர்மிங்காமில் பிறந்தார். இங்கிலாந்தின் நன்னியேட்டன் நகரத்திலுள்ள மன்னர் நான்காம் எட்வர்டு கல்லூரியில் படித்தார்.[1] 2000 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.[2] மார்த்தா எய்ன்சு மற்றும் இரிக்கார்டோ கியோவனெல்லியின் மேற்பார்வையின் கீழ் 2005 ஆம் ஆண்டில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து வானியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]