காற்றின் மொழி (திரைப்படம்)

காற்றின் மொழி
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புG. தனஞ்சயன்
கதைபொன்.பார்திபன் (திரைக்கதை)
மூலக்கதைதும்கரி சூலு by
சுரேஷ் ரைவேனி
இசைA. H. காஷிப்[1]
நடிப்புஜோதிகா
விதார்த்
லட்சுமி மஞ்சு
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசுவாமி
படத்தொகுப்புபிரவின் K. L.
கலையகம்BOFTA Media Works
Creative Entertainers
விநியோகம்மதுமதி சினிமா
வெளியீடுநவம்பர் 16, 2018 (2018-11-16)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காற்றின் மொழி 2018 [2][3] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை ராதா மோகன் எழுதி இயக்கியிருந்தார். இப்படம் இந்தியில் வெளியான 'தும்கரி சுலு' திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும். ஜோதிகா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.[4]

கதைச்சுருக்கம்

[தொகு]

விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் (ஜோதிகா) ஒரு நடுத்தர குடும்ப பெண்ணாவார். இவரின் செல்லப் பெயர் விஜி ஆகும். விரார் எனும் இடத்தில் விஜி தனது கணவனான பாலகிருஷ்ணன் (விதார்த்) மற்றும் தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார். மேலும் இவர் நன்றாக சமைக்க, பாடக்கூடியவராகக் காணப்பட்டார். தனது ஓய்வு நேரங்களில் வானொலி கேட்டதுடன் ஒரு முறை அதில் நடைபெற்ற சிறந்த சுற்றுலா தலம் எனும் போட்டியில் அமுக்க அடுகலனும் வென்றார். விஜிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. இதற்கிடையில் விஜியின் தந்தை மற்றும் சகோதரிகள் அவரை எப்பொழுதும் வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என திட்டினர். இவ்வாறு வானொலி கேட்கும் விஜிக்கு அங்கு வானொலித் தொகுப்பாளராகப் பணிபுரியும் அஞ்சலியின் பழக்கம் கிடைக்கிறது. வானொலி நிகழ்ச்சியில் தான் பெற்ற பரிசை வாங்க செல்லும் போது, வானொலித் தொகுப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு வானொலி நிலைய உயர் அதிகாரி மரியா மூலமாக கிடைக்கின்றது. அதன்பின்னர் அப்பணியில் ஏற்பட்ட சிக்கல்கள், தன் குடும்பத்தினரின் எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிக்கிறார், இவற்றைத் தாண்டி வாழ்வில் எவ்வாறு வெற்றி கொள்கிறார் என்ற போக்கில் அமைந்திருக்கிறது கதை.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

A.R. ரகுமானின் மருமகன் A.H காஷிப் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியிருந்தார்.[9]

தயாரிப்பு

[தொகு]

இப்படம் 40 நாள் பணி முடிவில் முதலாவது புகைப்படம் 2018 ஆனி 4ம் திகதி வெளியானது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Simbu, Jyothika team up for fourth time". 10 July 2018.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kaatrin-mozhi/movie-review/66642775.cms
  3. "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024. 
  4. "Confirmed: Jyothika to star in Tamil remake of 'Tumhari Sulu' - Times of India".
  5. "Kaatrin Mozhi: Lakshmi Manchu in awe of Jyothika - Times of India".
  6. "Photo: Lakshmi Manchu meets Suriya, says she's a fan of Jyothika - Times of India".
  7. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/251018/yogi-babu-is-mahesh-babu-in-jos-kaatrin-mozhi.html
  8. http://www.cinemaexpress.com/stories/news/2018/oct/26/yogi-babu-to-play-a-cameo-in-kaatrin-mozhi-8490.html
  9. "Confirmed: AH Kaashif to compose music for 'Kaatrin Mozhi' - Times of India".
  10. "Kaatrin Mozhi: Tamil remake of Tumhari Sulu starring Jyothika starts shoot; film aims for October release- Entertainment News, Firstpost".

வெளி இணைப்புகள்

[தொகு]