காற்று வெளியிடை | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | மணிரத்னம் |
கதை | மணிரத்னம் |
இசை | பாடல்கள்: ஏ. ஆர். ரகுமான் பின்னணி இசை: ஏ. ஆர். ரகுமான் கியூடப்-இ-கிரிபா |
நடிப்பு | கார்த்திக் சிவகுமார் அதிதி ராவ் ஹைதாரி |
ஒளிப்பதிவு | ரவி வர்மன் |
படத்தொகுப்பு | அ. சிறீகர் பிரசாத் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
விநியோகம் | தேனாண்டாள் படங்கள் |
வெளியீடு | 7 ஏப்ரல் 2017 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் (திருத்திய பதிப்பு) 147 நிமிடங்கள் (முழுப் பதிப்பு) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காற்று வெளியிடை 2017 ஆவது ஆண்டில் மணிரத்னம் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் சிவகுமார், அதிதி ராவ் ஹைதாரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இது ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழில் வெளியான அதே நாளில் செழியா என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளியானது.[1]. இத்திரைப்படத்தின் பாடல்கள் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது; சிறந்த இசையமைப்பிற்காக (பாடல்கள்) ஏ. ஆர். ரகுமானுக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்துள்ளன.[2]
இந்திய விமானப்படையின் பைலட்டான கார்த்திக்(வருண்) .காஷ்மீரில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஒரு நாள் தோழியுடன் ஜீப்பில் பயணிக்கிறார் அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு,மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு அதிதி (லீலா)தான் சிகிச்சை அளிக்கிறார்.நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாமல் மோதல் ஏற்படுகிறது.அதன் பின்னர் கார்த்தி இராணுவத்திற்கே திரும்புகிறார்.பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் கார்த்தி கைதியாக மாட்டிக் கொள்கிறார்.பின்னர் அங்கிருந்து எப்படி தப்பித்தார். அவர் காதல் என்ன ஆனது என்பதை நோக்கி மீதி கதை நகர்கிறது.