காலிட் ஆல்டர் Galit Alter | |
---|---|
பிறப்பு | 1976/1977 (அகவை 47–48)[1] |
துறை | நோயெதிர்ப்பியல், நோய்த்தொற்று |
பணியிடங்கள் | ஆர்வார்டு மருத்துவப் பள்ளி ராகோன் நிறுவனம் |
கல்வி | முனைவர் பட்டம், மக்கில் பல்கலைக்கழகம்[2] |
விருதுகள் | மாசாசூசெட்சு பொது மருத்துவமனை ஆராய்ச்சி அறிஞர் விருது (இருமுறை)[3] |
இணையதளம் ragoninstitute |
காலிட் ஆல்டர் (Galit Alter) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நோயெதிர்ப்பு மற்றும் தீநுண்மி நிபுணராவார். மெக்கில் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றார் மேலும் இங்குள்ள எய்ட்சு ஆராய்ச்சி மையத்தில் முதுகலை பயிற்சியை முடித்தார். ஆர்வார்டு மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், ராகோன் நிறுவனத்தின் மாசாச்சூசெட்சு பொது மருத்துவமனை, ஆர்வார்டு ஆகிய நிறுவனங்களில் குழுத்தலைவராக இருக்கிறார். டாக்டர் ஆல்டரின் பணி, உலகத்தை அழிக்கும் தொற்று நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் தொடர்புகளை வரையறுக்கும் அமைப்புகள், உயிரியல் கருவிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக எச்.ஐ.வி -1 நோய்த்தொற்றுக்கு பதிலளிக்கும் விதமாக குறிப்பிட்ட இயற்கை உயிரணு கொல்லி செல்களின் துணை வகைகளை விரிவாக்குவது குறித்த பணிக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.[4][5] கோவிட்-19 நோய்த்தொற்று விளைவுகளை கணிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நோயெதிர்ப்பு உயிரணு- கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு ஆய்வுகளில் இவர் ஈடுபடுகிறார்.[1][6]
ஆல்டர் இரண்டு முறை மதிப்புமிக்க மாசாசூசெட்சு பொது மருத்துவமனை ஆராய்ச்சி அறிஞர்கள் விருதைப் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு அமெரிக்க நுண்ணுயிரியல் சங்கத்தின் உறுப்பினராக ஆல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.