காலித் அகுமத் (Khaled Ahmed (பிறப்பு:20 செப்டம்பர், 1992) வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். நவம்பர் ,2018 இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[1] வங்காளதேச தேசிய அணி,வங்காளதேச அ அணி , மற்றும் சியால்கோட் மாகாண அணி , பிரைம் தோலேஷ்வர் சங்கம் ,சிட்டகொங் வைக்கிங்ஸ் ,தாக்கா டைனமிட்ஸ் ஆகிய அணிகளுக்காக இவர் விளையாடி வருகிறார்.
இவர் 2015 ஆம் ஆண்டு முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10இ ல் நடைபெற்ற தேசிய கிரிக்கெட் லீக்கில் இவர் சியல்கோட் மாகாண அணிக்காக விளையாடினார்.[2]பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். மே 5 இல் தாக்கா மாகாண பிரீமியர் கிரிக்கெட் லீக்கில் இவர் பிரைம் தோலேஷ்வர் சங்கம் சார்பாக விளையாடினார்[3].இருபது20 போட்டிகளில் இவர் 2017 ஆம் ஆண்டு முதலாக விளையாடி வருகிறார். அந்த ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் தாக்கா டைனமிட்ஸ் அணி சார்பாக அறிமுகமானார்.[4]
2018-19 ஆம் ஆண்டிற்கான தேசியத் துடுப்பாட்ட லீக்கில் இவர் தாக்கா மெட்ரோபொலிஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றினார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 10 இலக்குகளை முதல் முறையாக வீழ்த்தினார்.[5] பின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச துடுப்பாட்ட லீக்கிற்கான வரை சிட்டகொங் வைக்கிங்ஸ் அணியில் இடம் பெற்றார்.[6]
2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.நவமபர் 11 இல் டாக்காவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்க ஓவர்களை முஸ்தபிகுர் ரகுமானுடன் இணைந்து வீசிய இவர் 18 ஓவர்களை வீசிய இவர் 48 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரன்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓவர்களை வீச 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் வங்காளதேச அனி 226 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[7]
இருபது20 போட்டிகளில் இவர் 2017 ஆம் ஆன்டு முதலாக விளையாடி வருகிறார். அந்த ஆண்டில் நவம்பர் 5 இல் சியல்கோட்டில் நடைபெற்ற வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் தாக்கா டைனமிட்ஸ் அணி சார்பாக அறிமுகமானார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார்.இந்தப் போட்டியில் தாக்கா டைனமிட்ஸ் அணி 65 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
ஆசியக் கிண்ணம் 2018 தொடருக்கான 31 வீரர்கள் கொண்ட வரைவு வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் இவர் இடம்பெற்றார்.[8]