காலியம்(III) சயனைடு

காலியம்(III) சயனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • காலியம் முச்சயனைடு
இனங்காட்டிகள்
ChemSpider 10004244
InChI
  • InChI=1S/3CN.Ga/c3*1-2;/q3*-1;+3
    Key: LRRAVXULCHBNIH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21122422
  • [C-]#N.[C-]#N.[C-]#N.[Ga+3]
பண்புகள்
Ga(CN)3
வாய்ப்பாட்டு எடை 147.78 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 450 °C (842 °F; 723 K)[1] (சிதைவடையும்)
வினைபுரியும்[1]
கரைதிறன் டெட்ரா ஐதரோபியூரானில் கரையும், எக்சேன் -கரையாது[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு Cubic
புறவெளித் தொகுதி Pm3m
Lattice constant a = 5.295 Å
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காலியம்(III) சயனைடு (Gallium(III) cyanide) Ga(CN)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காலியம் தனிமத்தின் சயனைடு உப்பான இச்சேர்மம் ஒரு காற்று உணரியாகும். வெண்மை நிறத்துடன் திண்மமாக காணப்படும் காலியம்(III) சயனைடு 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது.

தயாரிப்பு

[தொகு]

காலியம்(III) குளோரைடு மற்றும் மும்மெத்தில் சிலில் சயனைடு ஆகியவை 75 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து காலியம்(III) சயனைடு உருவாகிறது:[1]

3 Me3SiCN + GaCl3 → 3 Me3SiCl + Ga(CN)3

வினைகள்

[தொகு]

Ga(CN)3 மற்றும் LiCN அல்லது CuCN ஆகியவற்றின் வினை மூலம் டெட்ராசய்னோகாலேட்டு(III) அயனியை உருவாக்க முடியும். இது பிரிடினுடன் சேர்ந்து வினைபுரிந்து Ga(CN)3(NC5H5)2 என்ற சேர்மத்தை உருவாக்குகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Louis C. Brousseau; Darrick Williams; J. Kouvetakis; M. O'Keeffe (1997). "Synthetic Routes to Ga(CN)3 and MGa(CN)4 (M = Li, Cu) Framework Structures" (in en). Journal of the American Chemical Society 119 (27): 6292–6296. doi:10.1021/ja9702024. 
  2. A. V. G. Chizmeshya; C. J. Ritter; T. L. Groy; J. B. Tice; J. Kouvetakis (2007). "Synthesis of Molecular Adducts of Beryllium, Boron, and Gallium Cyanides: Theoretical and Experimental Correlations between Solid-State and Molecular Analogues" (in en). Chemistry of Materials 19 (24): 5890–5901. doi:10.1021/cm071275h.