காலும்மா ஆம்பிரின்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காலும்மா
|
இனம்: | கா. ஆம்பிரின்சு
|
இருசொற் பெயரீடு | |
காலும்மா ஆம்பிரின்சு (ராமானன்ந்தோசா, 1974)[2] | |
காலும்மா ஆம்பிரின்சு (Calumma ambreense) என்பது மடகாசுகரில் காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும்.[3]
கா. ஆம்பிரின்சு பச்சோந்திகள் 40 முதல் 55 செமீ வரை வளரக்கூடியன. இவற்றின் அளவு காரணமாக பெரிய பச்சோந்தி சிற்றினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஆம்பர் மலைத் தேசியப் பூங்காவின் மழைக்காடுகளில் இவை வசிக்கின்றன. கா. ஆம்பிரின்சு கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1200 மீட்டர் உயரத்தில் மட்டுமே வாழக்கூடியன. இவை முக்கியமாக ஒன்றரை முதல் பத்து மீட்டர் உயரமுள்ள மரங்களில் வாழ்கின்றன. இரவில், இந்தப் பச்சோந்திகள் - ஏறக்குறைய அனைத்து உயிரினங்களைப் போலவே- பிரகாசமான நிறத்தில் காணப்படும். பகல் நேரங்களில் இவை பெரும்பாலும் 2 மீ உயரத்திற்கு மேல் உள்ள மரக் கிளைகளில் அமர்ந்திருக்கும். சில நாட்களே ஆன இளம் பச்சோந்திகள் பெரும்பாலும் நிலத்திற்கு மிக அருகில் உள்ள மிக மெல்லிய செடிகளில் உறங்குகிறது.[4]