முழுப்பெயர் | கால்பந்து கழகம் |
---|---|
தோற்றம் | 1824; 199 ஆண்டுகளுக்கு முன்பு |
கலைப்பு | அண். 1841 |
ஆட்டக்களம் | தால்ரி பூங்கா (1824–31) கிரீன்யில் பூங்கா (1831–41) |
கால்பந்துக் கழகம் (Foot-Ball Club) என்பது இசுக்காட்லாந்து நாட்டின் தலைநகரமான எடின்பரோ நகரத்தில் 1824 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கால்பந்து கழகத்தைக் குறிக்கிறது.[1] கால்பந்தைப் போலல்லாத ஒரு வகை கால்பந்து விளையாட்டை கோடை மாதங்களில் இக்கழகத்தினர் விளையாடினர்.[1] ஆயினும்கூட, ஏதோ ஒருவகையில் கால்பந்து விளையாடிய ஆரம்பகால பதிவு செய்யப்பட்ட கால்பந்து கழகம் இதுவே என்று இந்த அமைப்பு உரிமை கோரலாம்.[2] பழைய கால்பந்து கழகத்தின் ன் பாரம்பரியத்தை புதுப்பிக்கும் முயற்சியில், 2007 ஆம் ஆண்டில் இதே பெயரில் ஒரு நவீன கால்பந்து கழகம் உருவாக்கப்பட்டது.
எடின்பரோ நகரத்தின் இந்த கால்பந்து கழகம் 1824 ஆம் ஆண்டுக்கு முந்தைய பதிவுகளுடன் ஒப்பிடுகையில் உலகின் மிகப் பழமையான கால்பந்து கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3][4] 1824 மற்றும் 1841 ஆம் ஆண்டுகளுக்கிடையேயான கழகத்தின் உறுப்பினர் பட்டியல்கள் மற்றும் கணக்குகள் இசுக்காட்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[1]
1824 ஆம் ஆண்டில் இயான் ஓப்பு என்பவரால் கால்பந்து கழகம் நிறுவப்பட்டது. 1831 ஆம் ஆண்டு வரை கிரீன்யில் பூங்காவிற்கு மாற்றப்படும்வரை தால்ரின் பூங்கா விளையாட்டரங்கில் இக்கழ்கம் செயல்பட்டது. ஒவ்வொரு கோடைகாலத்திலும் கழக உறுப்பினர்கள் சந்தித்து விளையாடியதாக அறியப்படுகிறது. ஆனால் 1841 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை.[3]
கால்பந்து கழ்கத்தின் 1833 அம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் பின்புறத்தில் கையால் எழுதப்பட்ட விதிகளின் சுருக்கமான தொகுப்பு காணப்பட்டது. என்று 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. கால்பந்தின் ஆரம்பகாலத்தில் எழுதப்பட்ட விதிகளாக இது விவரிக்கப்பட்டுள்ளது.[5][6][7]
2007 ஆம் ஆண்டில், இசுக்காட்லாந்து கால்பந்து அருங்காட்சியகத்தின் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இசுபார்டன்சு கால்பந்து கழகத்தின் பயிற்சியாளரான கென்னி கேமரூனால், இதே பெயரில் ஒரு கால்பந்து கழகம் உருவாக்கப்பட்டது.[8] கழகத்தின் ஆண்கள் எடின்பர்க்கு சண்டே பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுகிறார்கள். பெண்கள் இசுக்காட்டிய பெண்கள் கால்பந்து லீக் போட்டியின் இரண்டாவது பிரிவு தென்கிழக்கு பிரிவில் விளையாடுகிறார்கள்.