காவேரி | |
---|---|
பிறப்பு | காவேரி முரளிதரன் திருவல்லா, கேரளம், இந்திா |
மற்ற பெயர்கள் | கல்யாணி, காவேரி சூர்யா கிரண் |
பணி | காவேரி |
செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது |
வாழ்க்கைத் துணை | சூர்யா கிரண் |
காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர்.[1][2][3]
இயக்குநர் சூர்யா கிரண் என்பவரை மணந்த இவர் தற்போது அவரைப் பிரிந்து வாழ்கிறார்.[4][5] இவரது முன்னாள் கணவன் சூர்யா கிரண் 48வது வயதில், 2024 மார்ச் 11 அன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.
இவர் சன் தொலைக்காட்சியில் தியாகம் என்ற தொடரில் அபிராமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். to 1.30 PM