கிகுச்சி ஆறு (菊池川, கிகுச்சி-கவா ) ஜப்பானின்கியோஷோவின் குமாமோட்டோ மாகாணத்தின் வடக்குப் பகுதி வழியாகப் பாய்கிறது. இந்த ஆற்றின் மூல ஆதாரமானது , 1041 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அசோ மவுண்டிற்கு அருகிலுள்ள அசோ நகரத்தின் ஃபுகாபா என்னும் இடமாகும்.[1] இங்கு உற்பத்தியான ஆறு கிகுச்சி பள்ளத்தாக்கு வழியாக மேற்கு நோக்கி பாய்கிறது. இது கிகுசுய் அருகே தெற்கே திரும்பி அரியாக் கடலில் உள்ள ஷிமாபரா விரிகுடாவில் கலக்கிறது. அதன் முகத்துவாரத்தினருகில் நில மீளமைப்பு நடைபெறுகிறது. [2]
இந்த நதியின் மொத்த நீளம் 71 கி.மீ ஆகும். இது 1041 மீட்டர் உயரத்தில் தொடங்கி 995 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றின் அகலம் 24 மீட்டர் முதல் 72 மீட்டர் வரை இருக்கும். தற்போதைய வெளியேற்ற வேகம் ஆண்டு முழுவதும், வினாடிக்கு 10 முதல் 350 கன மீட்டர் வரை மாறுபடும். [3]
↑Ohmoto, T., R. Hirakawa, and K. Watanabe. "Flow pattern and sediment transport in the Kikuchi River mouth." In 6th International Symposium on Environmental Hydraulics. 2010.