கிடைக்காத பெயர் (Unavailable name) என்பது விலங்கியல் பெயரிடலில், விலங்கியல் பெயரிடலின் பன்னாட்டுக் குறியீட்டின் விதிகளுக்கு இணங்காத பெயராகும். எனவே இதனால் ஒரு உயிரலகிற்கான சரியான பெயராக இதனைப் பயன்படுத்த முடியாது. இத்தகைய பெயர், சரத்துகள் 10 முதல் 20 வரை உள்ள விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை அல்லது விதிகள் 1.3-ன் கீழ் விலக்கப்பட்டுள்ளது.
கிடைக்காத பெயர்களில் "ஓரிசோமிசு கைபெனெமசு" மற்றும் "உபிராஜரா ஜூபாட்டசு" போன்ற வெளியிடப்படாத பெயர்கள்,[1] நிகராகுவான் நெல் எலிக்கு முன்மொழியப்பட்ட மைக்ரோனெக்டோமிசு என்ற துணைப்பேரினப் பெயர் போன்ற விவரங்கள் இல்லாத பெயர்கள் (நாமினா நுடா), [2] தைகா மூஞ்சூறுவின் சோரெக்சு ஐசோடன் பிரின்செப்சு மொன்டனசு,[3] மற்றும் பல்வேறு வகைகளில் உள்ள துணையினங்களின் (கீழ்நிலை துணைச்சிற்றினப் பெயர்கள்) கீழ் தரவரிசையுடன் முன்மொழியப்பட்ட பெயர்கள்.
பொதுவாக அடிக்கடி குழப்பம் ஏற்பட்டாலும், கிடைக்காத பெயர் அவசியமில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம், கிடைக்காத தொன்மா பெயரான "உபிராஜரா ஜுபாடசு" ஆகும். இது இதன் பெயரிடல் நிலையைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு முன் அப்பட்டமான பெயர் என்று பொதுவாகக் கருதப்பட்டது.[1]