![]() கிந்தா மாவட்டம் அமைவிடம் பேராக் | |
ஆள்கூறுகள்: 4°35′N 101°05′E / 4.583°N 101.083°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | பத்து காஜா |
பெரிய நகரம் | ஈப்போ |
நகராட்சி | ஈப்போ நகராண்மைக் கழகம் (வட கிந்தா) பத்து காஜா மாவட்ட மன்றம் (மேற்கு கிந்தா) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | தர்மிசி மனாப் (Tarmidzi Manap)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,305 km2 (504 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 7,44,715 |
• மதிப்பீடு (2015) | 8,10,400 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
இடக் குறியீடு | +6-05 |
வாகனப் பதிவு | A |
கிந்தா மாவட்டம் (ஆங்கிலம்: Kinta District; சீனம்; 近打) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் இரு மன்றங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றம் (Ipoh City Council), பத்து காஜா மாவட்ட மன்றம் (Batu Gajah District Council) ஆகிய இரு நகர மன்றங்கள். ஈப்போ மாநகர் மன்றம், ஈப்போவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்து காஜா மாவட்ட மன்றம், பத்து காஜா நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
மலேசியாவில் மக்கள் தொகையின் பெருக்கத்தைப் பொருத்து ஒரு மாவட்ட மன்றம், ஒரு நகர மன்றமாக உயர்வு காண முடியும்.ஒரு நகர மனறம் ஒரு மாநகர் மன்றமாக மாற்றம் காண முடியும். City Hall எனப்படும் மாநகர் மாளிகையின் மூலமாக கோலாலம்பூர், வட கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்கள் நிர்வாகம் செய்யப் படுகின்றன. மலேசியாவின் இதர மாநகரங்கள் மாநகர் மன்றங்களினால் நிர்வாகம் செய்யப்ப்படுகின்றன.
18ஆம் நூற்றாண்டில் கிந்தா மாவட்டம் ஈய உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. உலகத்திலேயே அதிகமான ஈயம் கிந்தா மாவட்டத்தில் தான் எடுக்கப்பட்டது.[2]
கிந்தா மாவட்டம் 5 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]
கிந்தா மாவட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
1. பேராக் மாநில தலைநகரான ஈப்போவைத் தளமாகக் கொண்ட ஈப்போ நகராண்மைக் கழகம்.
2. பத்து காஜா நகரத்தை மையமாகக் கொண்ட பத்து காஜா மாவட்ட மன்றம்.
பின்வரும் கிந்தா மாவட்ட தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]
கிந்தா மாவட்ட இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 308,998 | 41.5% |
சீனர்கள் | 326,408 | 43.8% |
இந்தியர்கள் | 107,554 | 14.4% |
மற்றவர்கள் | 1,755 | 0.2% |
மொத்தம் | 744,715 | 100% |
மலேசிய நாடாளுமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல் (டேவான் ராக்யாட்) (2021). மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P63 | தம்பூன் | அகமட் பைசால் அசுமு | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P64 | ஈப்போ தீமோர் | வோங் கா வோ | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P65 | ஈப்போ பாராட் | எம். குலசேகரன் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P66 | பத்து காஜா | வி. சிவகுமார் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P70 | கம்பார் | சூ கியோங் சியோங் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P71 | கோப்பேங் | லீ பூன் சாய் | (பாக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்) |
பேராக் மாநில சட்டமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகள் (2021)
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P63 | N23 | மஞ்சோய் | அஸ்முனி அவி | (பாக்காத்தான் ஹரப்பான்) (அமானா) |
P63 | N24 | உலு கிந்தா | முகமட் அராபாட் வரிசை முகமட் | (பாக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்.) |
P64 | N25 | கெனிங் | ஜெனி சோய் சி ஜென் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P64 | N26 | தெபிங் திங்கி | அப்துல் அசீஸ் பாரி | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P64 | N27 | பாசிர் பிஞ்சி | லீ சுவான் ஹோ | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P65 | N28 | பெர்ச்சாம் | ஓங் பூன் பியாவ் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P65 | N29 | கெப்பாயாங் | கோ சுங் சென் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P65 | N30 | புந்தோங் | சிவசுப்பிரமணியம் ஆதிநாராயணன் | (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.) |
P66 | N31 | ஜெலாப்பாங் | சியா போ ஹியான் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P66 | N32 | மெங்லெம்பு | சாவ் காம் பூன் | (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க) |
P66 | N33 | துரோனோ | பால் யோங் சூ கியோங் | (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.) |
P70 | N41 | மாலிம் நாவார் | லியோங் சியோக் கெங் | சுயேட்சை |
P70 | N43 | துவாலாங் செக்கா | நோலி அஸ்லின் முகமட் ராட்சி | (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.) |
P71 | N44 | சுங்கை ராப்பாட் | முகமட் நிசார் ஜமாலுடின் | (பக்காத்தான் ஹரப்பான்) (அமானா) |
P71 | N45 | சிம்பாங் பூலாய் | டான் கார் கிங் | (பக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்.) |