கினபாத்தாங்கான் (P187) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kinabatangan (P187) Federal Constituency in Sabah | |
கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி (P187 Kinabatangan) | |
மாவட்டம் | கினபாத்தாங்கான் மாவட்டம் தொங்கோட் மாவட்டம் பெலுரான் மாவட்டம் |
வட்டாரம் | சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,773 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | தொங்கோட்; பெலுரான்; கினபாத்தாங்கான் |
பரப்பளவு | 18,068 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | புங் மொக்தார் ராடின் (Bung Moktar Radin) |
மக்கள் தொகை | 216,087 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan Federal Constituency; சீனம்: 京那巴当岸联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவில்; கினபாத்தாங்கான் மாவட்டம், தொங்கோட் மாவட்டம், பெலுரான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P187) ஆகும்.[5]
கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கினபாத்தாங்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கினபாத்தாங்கான் நகரம்.
இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும்; வடமேற்கே சண்டக்கான் நகரத்தில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[7] கினபாத்தாங்கான் எனும் பெயர் முதலில் சினபாத்தாங்கான் (Cinabatangan) என்று அழைக்கப்பட்டது. நீண்ட ஆறு என்று பொருள். இதற்கு ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனக் குடியேற்ற ஆளுநர் பெயரிட்டதாகவும் அறியப் படுகிறது.
கினபாத்தாங்கான் மாவட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் நிர்வாகத்தின் போது நிறுவப்பட்டது.
கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கினபாத்தாங்கான் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P118 | 1971-1973 | பெங்கீரான் அகமட் இண்டார் (Pengiran Ahmad Indar) |
அசுனோ |
1973-1974 | பாரிசான் நேசனல் (அசுனோ) | |||
4-ஆவது மக்களவை | P124 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | அப்துல் கனி மிசுபா (Abdul Ghani Misbah) |
பாரிசான் நேசனல் (சபா மக்கள் முன்னணி) (BERJAYA) | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P141 | 1986-1990 | பிட்டிங் முகமட் அலி (Pitting Mohd. Ali) |
பாரிசான் நேசனல் (அசுனோ) |
8-ஆவது மக்களவை | 1990-1995 | ஜுகார் மகிருடின் (Juhar Mahiruddin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
9-ஆவது மக்களவை | P162 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | புங் மொக்தார் ராடின் (Bung Moktar Radin) | ||
11-ஆவது மக்களவை | P187 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
புங் மொக்தார் ராடின் (Bung Moktar Radin) | பாரிசான் நேசனல் (BN) | 16,842 | 57.38 | 12.13 ▼ | |
மசிலாவதி அப்துல் மாலிக் (Mazliwati Abdul Malek Chua) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 12,512 | 42.62 | 19.44 | |
மொத்தம் | 29,354 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 29,354 | 98.23 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 528 | 1.77 | |||
மொத்த வாக்குகள் | 29,882 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,773 | 65.56 | 1.91 ▼ | ||
Majority | 4,330 | 14.81 | 29.24 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)