கின்மென் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() கின்மென் தேசியப் பூங்காவில் உள்ள வரலாற்றுப் பகுதி | |
![]() கின்மென் கவுண்டி பகுதியில் உள்ள கின்மென் தேசியப் பூங்கா பகுதி | |
அமைவிடம் | கின்மென், ஃபியூசின் மாகாணம், சீனக்குடியரசு |
ஆள்கூறுகள் | 24°26′52″N 118°21′52″E / 24.44778°N 118.36444°E |
பரப்பளவு | 35.29 km2 (13.63 sq mi) |
நிறுவப்பட்டது | 18 அக்டோபர் 1995 |
www.kmnp.gov.tw |
கின்மென் தேசிய பூங்கா (Kinmen National Park) என்பது சீனக் குடியரசின் ஃபுச்சியன் மாகாணத்தில் உள்ள கின்மென் நகரில் உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.
இந்தப் பூங்கா உள்ளூரில் இராணுவச் சட்டம் நீக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1995 -ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]
பூங்கா 35.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தப் பரப்பானது கின்மென் கவுண்டி பகுதியின் கால் பகுதி ஆகும். இது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை தைவு மலை, குனிங்டோ, குகாங், மஷான் ஹில் மற்றும் லியு ஆகும். [2] [3]
இப்பகுதியைச் சுற்றியுள்ள குறைவான மனித மக்கள்தொகை மற்றும் துணை வெப்பமண்டல காலநிலை காரணமாக, இந்தப் பூங்கா இலையுதிர்காலத்தில் வசந்த காலம் வரை புலம்பெயர்ந்த பறவைகளுக்கான இடமாக மாறுகிறது. இப்பகுதியில் 319 வகையான பறவைகள் காணப்பட்டுள்ளன. [3]
{{cite web}}
: Missing or empty |title=
(help)CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]